Sunday, February 27, 2011

பதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியின் சர்டிபிகேட்


”தென்மேற்கு பருவக்காற்று படம் மக்களிடையே சென்றடைய பதிவர்களின் விமர்சனங்கள் மிகவும் உதவின. இதுபோன்ற சிறு படங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பதிவர்களுக்கு இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு உதவிய பதிவர்களுக்கு என் நன்றி”

- 26.02.2011, டிஸ்கவர் புக் பேலஸில் சீனு ராமசாமி கூறியது.


தமிழ் திரையுலகில் ஒரு ரசனை மாற்றத்தை பதிவர்கள் முயன்றால் நிச்சயம் கொண்டுவர முடியும் – என்ற கதை முன்னேற்றக் கழகத்தின் வாதத்தை சீனு ராமசாமி வழிமொழிந்துள்ளார். இதற்கு அவருக்கு ஒரு நன்றி.

பிரபல தொலைக்காட்சி சேனல்கள் இப்போது திரை விநியோகஸ்தர்களாக பரிணமித்து, தாங்கள் விநியோகிக்கும் படங்களை இடைவிடாத விளம்பரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். இந்த முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில் தோற்றாலும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவது சிறு படங்கள் தான்.

இன்று ஒரு படம் தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம் அதற்கு விளம்பரம் கொடுக்க ஆகும் செலவு. இதனால் கதை சார்ந்த சிறு படங்கள் தயாரவதற்கும், வெளிவருவதற்கும் பெரும் இடையூறுகள் எற்பட்டுள்ளன. இந்த சூழலில் கதை சார்ந்த சிறு படங்களை ஆதிர்ப்பதன் மூலம் பதிவர்கள் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வருவதற்கு வழிவகுக்கமுடியும்.

- கமுக கொ.ப.செ.

1 comment:

  1. தென்மமேற்கு பருவக்காற்று , மைனாவுடன் போட்டியிட்டு மைனா வென்று விட்டது , நோர்வே ஒஸ்லோவில் நடந்த தமிழர் திரைப்பட விழாவில் , மைனாவும் நல்ல படம் தான் ...
    ஆனால் தென்மேற்குப் பருவக்காற்று , பழைய கிராமங்களை அப்படியே காட்டும் அற்புதமான படைப்பு.. பல புதிய நடிகர்களை வைத்து ஒரு கலக்குக் கலக்கியிருக்கிறார் சீனு ராமசாமி என்கின்ற அற்புத இயக்குனர் …படம் முழுவது கொட்டிச் சிதறிக் கிடந்து கதையுடன் சேர்ந்து , எம்மை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைகள் அபாரம். பன்ச் நகைச்சுவை என்றே சொல்லலாம் ,,, கவுண்டமணி , செந்தில் , வடிவேலு எல்லோரையும் கலந்தாலும் இப்படியொரு நகைச்சுவை வராது ..அந்த வளர்த்தி குறைந்த இளைஞன் கலக்கல் தமிழ்ப் பட வரலாற்றில் சீனு ராமசாமியும் தென்மேற்குப் பருவக்காற்றும்,அந்த நகைச் சுவை இளைஞனும், என்றென்றும் வாழ்வார்கள். எல்லோரும் மிகச் சிறப்பு ..அதில் சரண்யாவின் பல புது முகங்கள் , கத்தி குத்து வேண்டிய பின் நடக்கும் நடை பார்வை எல்லாம் பிரமாதம். இபப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருதைக் கொடுத்து நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர் தம்மைக் கவுரவப் படுத்திக் கொண்டார்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...