Monday, February 14, 2011

தமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி




ஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள். இதற்கு க்ராஸ் ஜான்ரே (Cross-Genre) அல்லது கோரல் (Choral) படங்கள் என்று பெயர். இது ஸ்பெசல் டாப்பிங்கோடு கூடிய பீட்ஸாவைப்போல.



இரண்டு ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி க்ராஸ்-ஜான்ரே கதை எடுப்பது அங்கே பெரிய சாதனை. உதாரணமாக ஆயுத எழுத்து படத்தில வருவதுபோல பல கேரக்டர்கள் கோணத்தில் ஒரே சம்பவத்தை சொல்லும் திரைக்கதை யுக்தியை முதன்முதலில் உருவாக்கிய  (Alejandro González Iñárritu) இனாரித்து எடுத்துள்ள சமீபத்திய படம் பியூட்டிபுல் (Biutiful). பூயூட்டிபுல் படம் கேங்ஸ்டர்-கோஸ்ட் ஜான்ரி கலவை. இதையும் ஒரு திரைக்கதை சாகசம் என்று பலர் போற்றியுள்ளனர். இரண்டு ஜான்ரேக்கள் கலந்த திரைக்கதைக்கே இந்த கலாட்டா என்றால் நாலைந்து ஜான்ரேக்கள் கலந்து வரும் நம் தமிழ் மசாலா படங்களை நாம் கொண்டாட வேண்டாமா?



நமது சராசரி படங்களுக்கு ஜான்ரே என்கிற பாகுபாடே கிடையாது. ஒரே படத்தில் ஒரு சீன் காமெடியாகவும், அடுத்த சீன் ஆக்‌ஷனாகவும், அடுத்த சீன் ரொமான்ஸாகவும் மாறிமாறி தொடர்ந்துகொண்டிருக்கும். ஏன் இப்படி? நம்து டைரக்டர்களை கேட்டால் வரும் பதில் “பாஸ், அங்கெல்லாம் சாப்பாடு பர்கர், பீட்ஸா மாதிரி ஒன்னு-இரண்டு சவைதான். நம்க்கு அப்படியா? நாலஞ்சு வ்கையான கூட்டு, பொரியல், பருப்பு, சாம்பார், ரசம், மோர்-த்யிர், பாயாசம் என்று மல்டி-கோர்ஸ் மீல்ஸ் போல. அதனால தான் காமெடி,ஆக்‌ஷன்,ரொமான்ஸ் எல்லாம் ஒரே படத்தில வருது”.


அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...