Wednesday, February 16, 2011

கெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி





கெளதமின் பார்முலா

போலீஸ் ஆக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் A சென்டர்களிலும், பெண்களிடமும் பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் B & C சென்டர்களில் போலீஸ் ஆக்‌ஷனுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி இருக்கும். இந்த இரண்டு முரண்பாடான ஆடியன்ஸையும் ஒரே படத்தில் திருப்திபடுத்துவது ஒரு பெரும் சாதனை. இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுள் கெளதம் மேனனும் ஒருவர்.
இதற்கு முக்கிய காரணம் ஆக்‌ஷனுடன் அழகான காதல் கதையையும் இணைத்து கதையை சொன்னவிதமே. காக்க காக்க படத்தின் காதல் ட்ரேக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் காதல் ட்ரேக்கும் தனியாக படம் செய்தாலும் ஜெயிக்கும் அளவு தரமாக இருந்தது. ஆக்‌ஷன் கதை சொல்பவர்களால் காதல் கதை சொல்லவது கடினம். காதல் கதை சொல்பவர்களுக்கு ஆக்‌ஷன் கதை சொல்வது கடினம். இரண்டும் சேர்ந்தால் எல்லா சென்ட்டர்களிலும் வெற்றி நிச்சயம். இந்த வெற்றியை பலமுறை பெற்றுள்ளார் கெளதம்.
 




வாரணம் ஆயிரம் சரியாக வராதததிற்கு யார் காரணம் எனற பிரச்சனையில் கெளதம் சூரியாவிற்கும் டேர்மஸ் சரியில்லாமல் போய்விட்டது. வாரணம் ஆயிரம் சரியாக வராததிற்கு உண்மையில் யார் காரணம்?

கெளதமின் பதில் சூர்யா காக்க காக்க போன்ற படத்திலும் நடிக்கிறார். சிங்கம் போன்ற படத்திலும் நடிக்கிறார். இந்த முரண்பாடுகளால் எனது படம் பாதிப்புக்குளாகிறது. கேஸ்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது. இந்த கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது, இரண்டும் போலீஸ் கதைகளே. ஆனால் ஒன்று A-B-C என்று அனைத்து சென்ட்ர்களுக்கும் பொருந்தும் படம். மற்றது B-C சென்டர்களுக்கென்றே எடுக்கப்பட்ட (அதி)ஹிரோயிஸம் படம்.. சூர்யாவின் இந்த ஸ்டார் இமேஜ் படத்தின் திரைக்கதை, காஸ்ட்டியூம் என்று பல டிபார்மண்ட்களில் நுழைந்துவிடுகிறது. இந்த ஸ்டார் இமேஜ்ஜிற்காக செய்யப்பட்ட காம்ரோமைஸ் படத்தை பப்படம் ஆக்கிவிடுக்கிறது. ஆனால் படம் தோற்றால் முழு பழி டைரக்டரின் மேல்தான் விழுகிறது.

முதல் சவால்



வாரணம் ஆயிரம் படம் சரியாக வராததிற்கு காஸ்டிங் (Casting) மிஸ்ட்டேக் தான் காரணமே அன்றி தான் இல்லை என்று சவால விட்டு, அதை நிருபிக்கவென்றே எடுத்தது போலிருந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. பலத்த மலையாள வாடையுடனும் ஒரு காதல் கதையை தமிழில் வெற்றிபெற செய்யமுடியும் என்று தைரியமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நிருபித்த கெளதம் சூர்யாவுடனான சவாலில் ஜெயித்தார்.. சிம்புவிற்கு பொருந்திய கதை ஸ்டைல் வாரணம் ஆயிரத்தில் சூர்யாவிற்கு பொருந்தவில்லை. ஆக வாரணம் ஆயிரம் தோல்விக்கு காரணம் கெளதம் இல்லை என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

கேஸ்ட்டிங் என்பது மேலைநாடுகளில் மிக முக்கியமான டிபார்ட்மெண்ட். ஒரு படத்தின் வெற்றி தோல்வியைகூட பல சமயங்களில் கேஸ்ட்டிங் நிர்ணயிக்கிறது. மற்ற டைரக்டர்கள இதுவரை உணராதது தான் அவர்களது மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக போன தலைமுறை டைரக்டர்கள் பலர் தவறான கேஸ்ட்டிங்கினால் தங்களது மார்க்கெட்டை இழந்துள்ளார்கள் என்பதால் இந்த தலைமுறை டைரக்டர்கள் கெளதம் மேனனை முன்மாதிரியாக கொண்டு விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்

இரண்டாவது சவால் :


மின்னலே முதல் விண்ணைத் தாண்டி வருவாயா வரை அனைத்து படங்களும் இசையினால் தான் ஹிட்டானது என்பது இப்போது பலரின் (ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட) வாதம். இல்லை என்று நிருபிக்க சவால் விட்டு வேலை செய்வது போல் வருகிறது நடுநசி நாயகள். நடுநசி நாய்கள் படம் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.
  
இந்த முறையும் ஜெயிப்பாரா கெளதம் மேனன்?




பிகு : கெளதம் மேனனின் படங்களின் பெயர்கள் மிகவும் இலக்கிய நயத்துடன் இருப்பதால் கமுகாவினர்கள் அவருக்கு பெரும் ஆதரவை கொடுத்துவருகிறார்கள். சிவப்பு ரோஜாக்கள் போன்ற கதைகள் எப்படியும் ஆண்டுக்கு ஒன்றாவது வந்துவிடும். பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் சுந்தர ராமசாமியின் கவிதை தொகுப்பின் தலைப்பை நடுநசி நாய்கள் என்று வைத்திருப்பதால் படம் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...