Thursday, March 17, 2011

தமிழ் ரொமான்ஸ் பட கதை மூலங்கள்தமிழ் சினிமாவின் இசையும் பாடல்களும் இன்றும் கர்னாடக இசையின் ராகங்களை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. மேற்கத்தைய இசையின் தாக்கம் இருந்தாலும் தமிழ் சினிமாவின் இசை ராகங்களிலிருந்து பெரிதாக விலகவில்லை. ஆனால் கதைகள்?

காளிதாஸின் சகுந்தலை கதையின் தாக்கம் இன்றும் இருப்பதை பார்க்கிறோம். ஆனால் சகுந்தலையை தவிர்த்து வேறு பாரம்பரிய கதைகள் இன்றைய சினிமாவில் இருக்கிறதா? 

விக்ரமாத்தித்தன் வேதாளம் கதை

ஒரு மகனும் அவனது தந்தையும் ஆற்றை கடந்து மணலில் நடந்து வரும்போது இரண்டு பெண்கள் காலடி தடயங்களை பார்க்கிறார்கள். அப்போது தந்தை மகனிடம், சிறிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள். பெரிய காலடி தடயங்களை கொண்ட பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று கூற மகனும் சம்மதிக்கிறான். இருவரும் அந்த பெண்களை தேடிச் செல்கின்றனர். பல நாட்கள் தேடி அந்த பெண்களை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். 

ஆனால் அந்த பெண்களை பற்றிய ஒரு உண்மை அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சிறிய காலடி தடயங்களை கொண்ட பெண் தான் பெரிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணின் தாய். இப்போது தந்தையும் மகனும் என்ன செய்வது என்று குழம்புகிறார்கள். ஆனால் பிறகு முதலில் பேசியபடியே பெரிய காலடி கொண்ட பெண்ணை (மகளை) தந்தையும், சிறிய காலடி கொண்ட பெண்ணை (அம்மாவை) மகனும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.


இந்த கதையை சொல்லிவிட்டு, விக்கிரமாதித்தனை பார்த்து வேதாளம் கேட்கிறது “கல்யாணம் ஆனபின இந்த பெண்களுக்கு குழந்தை பிறந்தால், குழந்தைகளுக்கும் அந்த ஆண்களுக்கும் இடையிலான உறவு என்ன?இந்த முடிச்சை ஆதாரமாக கொண்டு வந்த படம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். இந்த விடுகதையை கூட கதையில் விவாதிக்கப்படுகிறது. அபூர்வ ராகங்கள் போல பாரம்பரிய கதைகளை ஆதாரமாக கொண்ட படங்கள் எவை?

பிற கதைகள்


மணிரத்னத்தின் ரோஜா சத்தியவான்-சாவித்திரி கதையை சார்ந்துள்ளது என்று பேசப்பட்டது. ஆனால் சத்தியவான்-சாவித்திரி கதையின் சாயல் ரோஜாவில் மிகக் குறைவே. மாதவனின் நள-தமயந்தியும் இதுபோல் பெயரளவில் தான் தாக்கம்.
இன்று வரும் தமிழ் ரொமான்ஸ் படங்களின் கதைகளின் ஆதாரங்கள் யாவை? அத்தகைய ஆதாரக் கதைகளை ஒரு தொடர்பதிவாக எழுத உள்ளேன்.

                                   ...மீதி அடுத்த பதிவில்.

Monday, March 14, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 2


முன்னுரை: 

திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைக்கின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.எங்கிருந்தோ வந்தாள்:


காதலின் ஒரு முக்கிய அம்சம் காதலின் நினைவுகள். நினைவுகள் இருக்கும் வரை தான் காதலும். ஆனால் அந்த நினைவுகள் வலுவிழந்தால் காதலும் வலுவிழந்து விடும் என்ற கருத்தை ஆதாரமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன.

இந்த வரிசையில் சிவாஜி-ஜெயலலிதா நடித்து மிகப் பெரிய ஹிட்டன ரொமன்ஸ் படம் எங்கிருந்தோ வந்தாள். படத்தின் மூலக்கதை ஒரு வங்க மொழி நாவலே. பைத்தியமாக இருக்கும் நாயகன், அவன் பைத்தியமாக இருந்த காலத்தில் அவனை அரவணைத்த நாயகியை. பைத்தியம் தெளிந்தவுடன் மறந்துவிடுகிறான். ஆனால் பல சோதனைக்கு பிறகு இணைகிறார்கள்.

இந்த மூலக்கதையின் நாயகன் பாத்திரத்தை நாயகியாகவும், நாயகியின் பாத்திரத்தை நாயகனாகவும் மாற்றி கதையமைத்து வெளிவந்த கமல்-ஸ்ரீதேவி படம் பாலும்கேந்திராவின் மூன்றாம் பிறை. கதையில் கமலின் பாத்திரத்தின் காதலோடு சில்க் ஸ்மிதா  பாத்திரத்தின் காமத்தை ஒரு அழகான காண்ட்ராஸ்ட் அமைத்தது மூன்றாம் பிறையின் சிறப்பு அம்சம் எனலாம். (இந்த ட்ராக்த்தான் படத்தை ஓடவைத்தது என்ற வாதம் ஓன்றும் உள்ளது).நினைவுகள் மறதி நோயான அம்னிஷியாவை காதல் மறதிக்கான காரணமாக வைத்து உருவாக்கப்பட்ட ரோமன்ஸ் படங்கள் தமிழில் ஏகத்திற்கு இருக்கின்றன. கணவனை மறந்து இன்னொருவரை
மணப்பதால் உருவாகும் முக்கோண காதல் கதைகள் ஒரு தனி ஜான்ரே அளவிற்கு அரைத்த மாவையே அரைத்து ஏகத்திற்கு படங்கள் வந்துள்ளன். உதாரணம் சிவக்குமார்-ஜெய்ஸ்ரீ நடித்த யாரோ எழுதிய கவிதை. இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ்

காதல் மறதியை மையமாக, ஆனால் இந்த காலத்திற்கு ஏற்றவாறு ஒரு வித்தியாசமான அம்னிசியாவுடன் கலந்து எடுத்த படம் ஜெயம் ரவியின் தீபாவளி (50 First Dates ஆங்கில படத்தின் சாயலும் இருக்கிறது).எங்கிருந்தோ வந்தாளின் ஆதாரம் :

ஆனால் எங்கிருந்தோ வந்தாள் கதையின் அம்சங்களும் கூட வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அதுவும் காளிதாஸின் சகுந்தலை தான். சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.
சகுந்தலையின் கதை காலத்திற்கு ஏற்ப எப்படியெல்லாம் மாறி. மருவி வருகிறது என்பது ஒரு வியப்பின் சரித்திரக் குறியீடு தானே?

Tuesday, March 1, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 1

முன்னுரை:
திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைகின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.


தேவதாஸ் :என்னை பொருத்தவரை ஒரு படம்/கதை எப்போது மாஸ்ட்டர்பீஸாகிறது என்றால் அந்த படத்தின் கதையை தழுவி பல கதைகள் (பல ஆண்டுகள் கழித்தும்) வரும்போதுதான். அந்த வகையில் தேவதாஸ் கதை தமிழில் மட்டுமல்ல இந்திய ரோமான்ஸ் படங்களிலும் ஒரு மைல்கல்-மாஸ்ட்டர்பீஸ். காதல் தோல்வியின் முதல் அடையாளம் தாடி என்றால, இரண்டாவது அடையாளம் தேவதாஸ். அந்த அளவு தேவதாஸ் பிரபலம். இந்த தேவதாஸின் பாதிப்பில் பல ரொமான்ஸ் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில சிலவற்றை பார்ப்போம்.சமீபத்தில் கூட தேவதாஸ் கதை பல முறை ரீமேக் ஆகியிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸும் அனுராக் காஸியாப்பின் தேவ்-டி யும் இதில் முக்கியமானவை. ஆனால் இவை இரண்டும் நேரடி ரீமெக்குகள். நேரடி ரீமேக்கில்லாமல் தேவதாஸின் சாரத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் மாற்றி, வேறு முலாம் பூசப்பட்ட தழுவல் படக் கதைகளை பாப்போம்.அதற்கு அந்த படத்தின் முக்கிய சாராம்சத்தை பார்க்கவேண்டும். தேவதாஸ் படத்தின் முக்கிய சாராம்சங்கள் – பால்யபருவ காதல் ஜோடி, ஏழை-பணக்காரன் ஏற்ற தாழ்வு காதலில் ஏற்படுத்தும் பிரச்சனை, காதலினால் பெரிய இடத்தில் கல்யாணம் பேசச்சென்று- அதனால் ஏற்படும் (பெற்றோர்க்கு) அவமானம், காதல் நிராகரிப்பு –பின் நிராகரித்த அதே பழைய காதலியை நினைத்து வாடுவது, (காதல் தோல்வியால் தன்னையே அழித்துக்கொள்வது ஆகியன.

வசந்த மாளிகையில் பால்யபருவ காதல் அம்சத்தை தவிர்த்து மற்ற அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. இதில் அவமானம் பெற்றோருக்கு அல்ல - காதலிக்கே நேரடியாக ஏற்படுகிறது. வசந்த மாளிகை படத்துடன் கான்சரை சேர்த்தால் – வாழ்வே மாயம். வாழ்வே மாயத்தில் ஹீரோவை பாடகனாக்கினால் – பயணங்கள் முடிவதில்லை. கல்யாணத்திற்கு பேசச்செனற் தாய்க்கு அவமானம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் வேறு மசாலா கலந்தால் – கிழக்கு வாசல்.தேவதாஸின் ஆதாரம் :

ஆனால் தேவதாஸ் கதையின் அம்சங்களே வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அது காளிதாஸின் சகுந்தலை. சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.சகுந்தலையின் சாரம் தேவதாஸில் கொஞ்சம் மருவி வெளிப்படுவது தெரிகிறதா? தேவதாஸை போல் இல்லாமல் சகுந்தலையின் சமீப கால டிட்டோ பதிவு சுபாஸ் கெய்யின் தாள் ( Taal ).

இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ் :

ஹிந்தியில் தேவதாஸின் சாரம் தொடர்ந்து பல படங்களில் வருகிறது. உதாரணமாக Bachna Ae Haseeno படத்தில் ஹீரோ ஒரு பெண்ணை காதலித்து மறந்துவிட்டு, பிறகு வேறு பெண்ணை காதலிக்கிறான், பிறகு அந்த பெண்ணையும் மறந்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் ஹீரோவை நிராகரிக்கும்போது காதல் நிராகரிப்பின் வலியை உணர்ந்து, தான் மற்ற பெண்களுக்கு இழைத்த கஷ்டத்தை உணர்ந்து, ஹீரோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க திரும்பிச் செல்கிறான்.Bachna Ae Haseeno – என்னை பொருத்தவரை மாறிக்கொண்டே இருக்கும் இன்றையை கால காதலை பிரதிபலிக்கும் ஒரு புத்திசாலித்தனமான தேவதாஸ் கதை.
Related Posts Plugin for WordPress, Blogger...