Saturday, February 5, 2011

விஜய் கமுகாவுடன் (ராமதாஸ் பாணி) கூட்டணி அறிவிப்பு



காவலன் ரிலீஸிற்கு பின் விஜய் விடும் எல்லா அறிக்கைகளிலும் தவறாமல் வரும் செய்தி இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். என்பதே. அதாவது அதிஹீரோயிஸம் கொள்கையை விட்டுவிட்டு கதை முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ள விரும்புகிறாராம்.

இந்த வார ஆனந்தவிகடன், குமுதம் இரண்டிலும் அட்டைப்பட ஹைலைட் விஜய். காவலினில் ஆக்‌ஷன்ஹீரோவாகயில்லாமல் காமெடிப்பீஸாகி விட்டது அவருக்கு பெரும் வருத்தம் போலும். அந்த ஆதங்கத்தில் நல்ல கதையில் இரண்டுமூன்று முக்கிய பாத்திரங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நடிப்பேன் என்று ஆனந்தவிகடனில் கூறுகிறார். ஆனாலும் அவர் மனமெல்லாம் அதிஹீரோயிஸம் கொள்கையில் தான். இனிமேல் வருடம் ஒரு கதை படம் பிறகு ஒரு அதிஹிரோயிஸம் படம் என்று இரண்டு பக்கங்களிலும் கால் வைத்துக்கொள்ள போகிறாராம். இது பமகா ராமதாஸின் இராஜதந்திரத்தைப்போல் - திமுக-அதிமுக என்று இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு கடைசி நேரத்தில் எந்த கட்சி ஜெயிக்கும் என்று தோன்றுகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி என்ப்து போலத்தான். ஆனால் விஜய் இன்றைய அரசியல் ராமதாஸின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிட்டார் என்று தெரியவில்லை.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் என்று விஜய் சொல்வதன் உள்-அர்த்தம் என்ன? நான் இப்போது கொஞ்சம் வீக்காக இருக்கிறேன். முன்னர் எனக்கு எனர்ஜி கொடுத்து நடசத்திரநடிகனாக்கியது போல்,  நல்ல கதைகள் மூலம் மீண்டும் எனக்கு எனர்ஜி கொடுங்கள். நான் மீண்டும் அதிஹீரோவாகி உங்கள் படங்களுக்கே ஆப்புவைக்கிறேன் டைரக்டர்களே என்பதே.

நல்லாத்தான் போய்கிட்டு இருக்குது, விஜய்.

விஜய்க்கு கமுக கொ.ப.செ (கொள்கைபரப்பு செயலாளர்) சொல்வதென்ன?

1. காலம் மாறிவிட்டது: விஜய், ரஜினியின் காலத்தைப் போல இப்போதைய காலம் இல்லை. விடலைகள் இன்று கிராமங்களில் கூட பெரும்பாலும் மெட்ரிக்கில் படிக்கிறார்கள். ஹிந்தி, ஆங்கில சேனல்களைப் பார்க்கிறார்கள். இன்ட்டர்நெட்டில் ஈசனைப்போல எல்லாம் படிக்கிறார்கள். சமுகசூழல் மிகவும் மாறிவிட்டது. அதனால் கதைகளும் மாறிக்கொண்டிருக்கிறது. ரஜினியே சாப்ட்வேர் இன்ஜினியாரகவும், சயிண்டிஸ்டாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் நடிக்கும் சுறா கதாபாத்திரத்தையும் ரஜினியின் சமீபகால கதாபாத்திரங்களையும் நீங்களே ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.

2. சமீப காலமாக உங்கள் படங்கள் ஓடாததிற்கு உங்களை த்விர உலகில் மற்ற எல்லோரையும் குற்றம்சொல்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் க்தையே இல்லாமல் உங்கள் சகாக்கள் விக்ரம், அஜித், சிம்பு ஆகியோர் நடித்த அதிஹீரோயிஸம் படங்களும் கூடத்தான் ஓடவில்லை. அவர்கள் யாரை குறைசொல்கிறார்கள். காலத்தின் மாற்றத்தை நன்றாக உணர்ந்த நட்சத்திரம் சிம்பு. அவர் தான் நீங்கள் மீண்டு எழுவதற்கான முன்னுதாரணம்.


3. சேட்டிலைட் சேனலகள் வந்தபின், திரைப்பட உலகில் தயாரிப்பாளர்கள்/விநியோகிஸ்தர்கள் கையே ஓங்கியுள்ளது. இது தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் இப்படித்தான் உள்ளது. இன்றைய வியாபார உலகில் நடிகர்களும் தங்களை ப்ரோமோட் பண்ணிக்கொள்ள டீவியில் வந்தே ஆகவேண்டும். விக்ரம், சூரியா போல நீங்களும் விளம்பரங்களில் நட்ப்பது ஏன்? சந்தடிசாக்கில் உங்களையும் ப்ரோமோட் பண்ணிக்கொள்ளத்தானே.. சினிமாவிற்குள் டீவி வராது. ஆனால் டீவிக்குள் சினிமா வந்து விடுகிறது. சினிமாவைவிட டீவியும் இன்ட்டர்னெட்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். SMS மூலமே உங்களை கதறகதற் குதறுபவர்கள் எல்லோரும் சன் டீவியின் வாரிசுகளில்லை. ஈசனின் வாரிசுகள் அவர்கள்.

4. கதைகளையும்  வசனங்களையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி வளைத்து ப்ராக்‌ஷி எழுத்தாளர், ப்ராக்‌ஷி டைரக்டராக வந்தது போதாமல், காவலன் மூலம் ப்ராக்‌ஷி விநியோகஸ்த்தராகவும் வலம் வர நினைப்பது எந்த அளவு ப்ராட்டிகல்?

5. உங்கள் நிஜ போட்டி இப்போது தனுஷ் என்பதை எத்தனை நாள் மறைக்க முடியும்? உங்கள் படம் வரும்போதெல்லாம் தன் படங்களை ரிலீஸ் செய்து, உங்கள் படங்களை ஒப்பிடும்போது என் படம் எவ்வளவோமேல் என்று சொல்லியே தனுஷ் தன் படத்தை வெகுகாலமாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் தனுஷை கவனியுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம்.


7. இந்த காலத்தில் அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்பதை
தண்ணிகுடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு திரையுலக தெயவம் சிரஞ்சீவியை கேட்டால் கதை கதையாக சொல்வார்.

உங்கள் ஈகோவை அடகுவைத்து விட்டுவிட்டு, கமுகாவுடன் நிரந்த கூட்டணி அமையுங்கள். ரசிகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்த நல்ல கதைசொல்லி டைரக்டர்கள் தான் உங்கள் நிஜ பலம் என்பதை உணருங்கள்.



1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...