Tuesday, February 1, 2011

கதைகளும் ஹிரோயிஸமும்


காதல் தோல்வியால் தற்கொலை...பரிட்ச்சையில் தோல்வியால் மாணவன் தற்கொலை.. பேப்பரில் செய்திகள் எப்போதும் தொடரும் கதைகள்.. ஏன் இந்த விபரீதமுடிவுகள்? கதைகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்ள நமது ஈகோ ந்ம்மை ஒரு ஹீரோவாக பாவித்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. வாழ்வில் நாம் தேர்ந்து எடுக்கும் பாதையில், நமக்கு முன் சென்றவர்களை/வென்றவர்களை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறோம். இவர்களின் பிம்பங்கள் நமது ஆழ்மனதில் படிய, நமது ஈகோ அவர்களை நமது ஹீரோ பாத்திரத்திற்குள் ஆதர்ச முன்மாதிரியாக வரித்துக்கொண்டுவிடுகிறது. வாழ்வில் நாமும் அந்த ஹீரோக்கள் சென்ற பாதையில் வெற்றிநடைபோட்டு செல்கிறோம். எல்லாம் சரியாக நடக்கும்வரை நேர்த்தியாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்பாராமல் நாம் சருக்கும்போது?

திரைபடங்களில் ஹீரோ வில்லனிடம் தோற்றால் படம் ஓடுமா? அதுபோல் தோற்கும் த்ருணங்களில் நமது ஈகோ நம்மிடம் போடா. நீயெல்லாம் ஒரு ஹீரோவாஎன்று திட்டி, நம் மனதை துவைத்து எடுத்துவிடுகிறது. காதலன்/காதலி பிரிவைவிட இந்த ஹீரோ பிம்பம் உடையும் கஷ்டமே பெரும்பாலான காதல் தற்கொலைகளுக்கும், தேர்வுகளில் தோற்பவர்களின் தற்கொலைகளுக்கும் காரணம்.

ஹீரோக்களும் ஆதர்ஷபுருஷர்களும்

நமது ஆதர்சங்களிலிருந்து நமது வாழ்க்கை கதை விலகிசெல்லும்போது நம்து ஈகோ, தனது ஆதர்ச ஹீரோக்களோடு ஓப்பிட்டு முதலில் நம்மை குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தும், தவறு நம்மிடம் இருக்கும்பட்சத்தில். ஆதர்சத்திற்கும் ஈகோவிற்கும் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க நம் வாழ்க்கை கதையின் நாயகனாக இருந்த ஈகோ வெறும் பார்வையாளனாக (alienated) மாறிவிடுகிறது.

நாம் தேர்ந்து எடுக்கும் ஹீரோக்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றவர்களாக (Role Model) இருப்பது எத்தனை முக்கியம்? ஆனால் அவர்கள் தமிழ்படங்களில் வரும் ஹீரோக்கள் போல் வாழ்க்கையிலிருந்து மிக விலகி (distorted) இருந்தால்? இந்த ஹீரோக்களோடு தங்களை ஒப்பிட்டுக்கொள்ளமுடியாதவர்கள் தங்கள் ஹீரோயிஸத்தை பேண்ட்டசி (Fantasy) திரைப்படங்களில் நாடுகிறார்கள். அதுபோன்ற திரைப்படங்களை திரும்ப்திரும்ப பார்த்து திருப்தியடைந்து கொள்கிறார்கள். விடலை பருவத்தில் இது போல பேண்ட்டசியில் மூழ்கியிருப்பது பெரிய குற்றம் இல்லை. ஆனால் 30 வயதினைக் கடந்தபின்?

ஹீரோயிஸத்தின் மீட்சி : கதைகளின் முக்கியத்துவம்

வாழ்வில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும்போது (தொழில்முறை தோல்விகள், காதல் தோல்விகள், உறவுகளின் இழப்புகள்) நமது ஹீரோயிஸம் கொஞ்சகொஞ்சமாக தளர்ந்துவிடுகிறது. தோல்விகளிலிருந்து மீண்டு, வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபட நம்மை புதுப்பித்துகொள்ள நமக்கு உறுதுணை கதைகளே.

இந்த புதுப்பித்தல் எல்லா மனிதர்களுக்கும் தேவை. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, வெற்றிகரமாக வாழ்க்கிறோம் என்று பெருமிததுடன் இருப்பவர்களுக்கும், வாழ்வின் நடுவயதில் (MiddleAge) ஒரு பெரிய நெருக்கடியை உருவாகும்பொழுது, தங்கள் ஹீரோயிஸத்தை புதுப்பித்துகொள்ள கதைகள் தேவைப்படுகிறது. இதனால்தான், நடுவயது நெருக்கடி (Middle-Age Crisis) என்பது படிக்கும் பழக்கம் அதிகமாகவுள்ள மேலைநாடுக்கலாச்சாரத்தின் நிறைய கதைகளின் மையக்கருவாக உள்ளது.

இது நாள்வரை ந்ம் நாட்டில் இந்த ஹீரோயிஸ நெருக்கடி சமயங்களில், தங்கள் கதைகளை புதுப்பித்துக்கொள்ள மக்கள் ஜோதிடததை நாடினார்கள். இன்றும் நாடுகிறார்கள். ஆனால் அறிவியல்சார்ந்த இன்றைய கலாச்சாரத்தில் ஜோதிடத்தின் இடத்தை நிரப்பும் சக்தி கதைகளுக்குத்தான் உள்ளது.

இலக்கிய நாவல்களின் கதைகள்

இலக்கிய நாவல்களில் கதையே இல்லை என்பது பெரும்பாலான வாசகர்களின் குற்றச்சாட்டு. யத்தார்த்த வாழ்வில் செதுக்கிய கதைஓட்டங்கள் (Plot கள்) இல்லை என்று அனுபவரீதியாக உணர்ந்தபின் மீண்டும் Plotகளை வழிமொழியும் கதைகளையே படிப்பதும், அத்தகைய திரைப்படங்களை பார்ப்பதும் உசிதம் இல்லை.

30-40 வயதிற்கு மேல் நாம் ஆக்சன் கொண்ட சாகசங்கள் செய்யமுடியுமா? சிறுவயதில் படித்த கதைகளையும், பார்தத திரைப்படங்களையும் போலவே பார்த்துக்கொண்டிருந்தால அது நமது ஹீரோயிஸத்தை புதுப்பிக்க உதவாது.அப்படி படிப்பது நாம் நம்மை ஒரு பேண்ட்டஸி (Fantasy) உலகில சஞ்சரித்துக்கொள்ளவே உதவும். ஆனால், இது யதார்த்த வாழ்வில் மேலும் நம்மை அந்நியப்படுத்தி, மேலும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும். வெறும் ஆக்‌ஷன், பஞ்ச் டைலாக்குகள், அடுத்தவர்களை நக்கல் செய்யும் ஜோக்ஸ் என்று மசாலா படங்களையே எண்ட்டர்டெய்ன்மெண்ட் என்று பார்ப்பவர்கள் வெகுசீக்கிரம் தங்கள் ஹீரோயிஸத்தை முற்றிலும் இழ்க்கிறார்கள். சின்ன தோல்வியை சந்தித்தாலேயே துவண்டுவிகிறார்கள்.

இலக்கியக் கதைகள் ந்ம் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்லாவிட்டாலும், ந்மக்கிருக்கும் பிரச்சனை நம்மைபோல் நிறையபேர்களுக்கு இருக்கிறது, நாம் தனித்து இல்லை என்ற உணர்வை குடுத்தாலே போதும், அந்த இலக்கியம் தன் பங்கை செய்துவிட்டது என்றாகிவிடும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...