Sunday, February 6, 2011

யுத்தம் செய்: கேள்வியும் நானே பதிலும் நானே



தமிழில் சினிமா என்றால் திரைக்கதையின் நடுநடுவே பாட்டு,காமெடி பிட் என்று தடங்கல் வரும். பல படங்களில் பாட்டு, டான்ஸ், காமெடி பிட்டுகளுக்கு நடுநடுவே தான் தடங்கலாக திரைக்கதை என்ற பெயரில் டாக்கி போர்ஷன் வ்ரும். நம்து சினிமா ஒரு “Cinema of Interruptions” என்று அயல்நாட்டினர் அழைக்கின்றனர். இந்த தடங்கல் மரபு காதல், மைனா போன்ற புதிய தலைமுறை படங்களில் கூட இருக்கிறது. (ஒரு விதிவிலக்கு உன்னைப்போல ஒருவன்).  இந்த மரபை மீரும் தைரியத்திற்கு மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய சபாஷ் போடலாம்.

ஒரு எழுத்தாளர் நேர்த்தி அவர் எதைச்சொல்கிறார் என்பதில் இருக்கும் அளவு, எவைகளைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார் என்பதிலும் இருக்கிறது. இநத நேர்த்தி மிஷ்கினிடம் இருப்பது யுத்தம் செய் படத்தில் தெரிகிறது

உதாரணம் : ஒப்பனிங் சீன். ஒரு குற்றம் நடப்பதை பார்த்துவிடுகிறார் ஒர் பெண். போலீஸுக்கு போன் பண்ணுகிறார். குற்றவாளிகள் இதை கவனித்துவிடுகிறார்கள். இந்த சீன் வேறு படமாயிருந்தால் அடுத்து வந்திருக்கும் சீன் : உடனே ஒரு சேசிங். சீன். இதில் அநத பெண் ப்ரேம்மை (frame) விட்டு வெளியே போகிறார். குற்றவாளிகளும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவ்வளவு தான். படம் முழுக்க இதுபோல காலகாலமாக வரும் கிளிச்சே (Cliché) சீன்களை கட் பண்ணிவிடுகிறார் மிஷ்கின்.

போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்றால் அது விஜயகாந்த ஸ்டைலில் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் அங்குமிங்கும் விசுக்விசுக்கென்று அலைவார். பிறகு ப்ரில்லியன்ஸி என்ற பெயரில் யாருமே எதிர்பார்க்காத சாகசம் செய்து கண்டுபிடிப்பார்.
ஆனால் இதில் ஒரு சாட்சி சொல்லும் ஒரே ஒரு சின்ன செய்தியை நூல்பிடித்து சென்று யதார்த்தமாக குற்றப்பின்னணியின் ஒவ்வொரு முடிச்சுக்கலாக அவிழ்கிறார் சிபி-சிஐடி சேரன். இதுபோல் இன்வெஸ்டிகேஷன் ப்ரோசீஜியரை மையமாக வைத்து எடுக்கப்படும் Police Procedural Genre படம் (மலையாளத்தில் சிபிஐ டைரிக்குறிப்பு) தமிழில் இதற்கு முன்னர் வந்ததாக நினைவில்லை.

போலீஸ் ப்ரோசீஜர் படம் என்பதால் மெலொட்ராமா (Melodrama ) சீன்களை தவிர்த்துவிடுகிறார் மிஷ்கின். உதாரணமாக சேரனின் தங்கை காணாமல் போய்விடுகிறார். ஆனால் த்ங்கையை போலீஸால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சேரனே இந்த கேஸை எடுத்துக்கொள்ளவும் அனுமதிப்பதில்லை..ரத்தினவேல் பாண்டியனாகமாறி ப்ஞ்ச்டைலாக் பேசி கேஸ் நடத்தும் எஸ்.ஐ யுடன் மோதி தூள்பறக்க இண்ட்ரோ ஆகாமல், சேரன் கோபத்தில் ரெஸிக்னெஸன் கொடுப்பதுடன் யதார்த்தமாக அறிமுகமாகிறார். மிஷ்கினுக்கு இந்த ஹீரோ அறிமுகம் ஒரு சின்ன சீன் தான். ஆனால் தமிழ்திரைக்கு ஒரு பெரிய தாவல்.


தத்துவார்த்தமான சிந்தனையை கதையில் இன்னொரு தளமாக கொண்டுவர மிஷ்கின் முயல்கிறார். ஹீரோவிற்கு ஜெ.கே என்று பெயர். போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் கேரக்டர் வாயிலாக சில தத்துவ-டைலாக்குகள். க்ளைமேக்ஸில் ஹீரோ வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கூறும் ஆறுதல். வ்வூயரிஸத்திற்கு (voyeurism) Eguus பாணியில் கண்களை குருடாக்கும் தண்டனை. இவைகள் மூலம் எக்ஸிட்டென்ஸியல் ப்ராப்ளம் (Existential Problem) போன்ற மனச்சிக்கல்கள் தமிழர்களுக்கும் உண்டு என்ற ஒரு சின்னகோடு அளவே இருந்தாலும் இந்த தளம்/பரிமாணமும் ஒரு நல்ல முயற்சி.

படத்தின் மிகப் பெரிய குறை : சராசரி ரசிகனும் முதலிலேயே யூகிக்க முடிவதால் இரண்டாம் பகுதி சருக்குகிறது. வில்லன் கோஷ்டியில் ஒரு முக்கிய அங்கத்தினரான ஏசி, தனது தரப்பு ஆட்கள் ஒவ்வோருவராக கொல்லப்படும்போது சும்மா உட்கார்ந்து புலம்புவதை விட்டுவிட்டு, ஹீரோவிற்கு போட்டிபோட்டுக்கொண்டு புலன்விசாரணை செய்திருந்தால், ரசிகர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு,  படம் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்குமோ?

தமிழ் படத்தின் இன்னொரு மரபு ஆடியன்ஸ் கேரக்டர். படத்தில் ஒரு கேரக்டர் கதை சம்பவங்களின் காரணத்தை அடிப்படை ஆடியன்ஸுக்கு தெள்ளத்தெளிவாக புரியுமாறு விளக்கமாக சொல்லிவிடுவார். ஆனால் தேர்ந்த ஆடியன்ஸுக்கு இதைவிட பெரிய கடுப்படித்தல இருக்கமுடியாது. அதனால் இநத ஆடியன்ஸ் கேரக்டரையே கட் பண்ணிவிட்டார் டைரக்டர்.

நடிகர்கள் எல்லோரும் பாஷாங்கில்லாமல் யதார்த்தமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். இறுதியில் ஹீரோவின் தங்கையை தங்கள் மகளாக பார்க்கும் புருஷோத்தமன் குடும்பத்தின் செண்டிமெண்ட் நன்று.

படம் ஒரு நல்ல முயற்சி.


பிகு: இந்த ஆடியன்ஸ் கேரக்டர் இல்லாததால் நிறைய கேள்விகள். அதில் சில:

(படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு)

1. படத்தில் வரும் முதல் சீன் (ஆட்டோ சீன்னிற்கும்) செப்டம்பரிலும் அடுத்த சீனிற்கும் ஜனவரியிலும் நடக்கிறது. இதை ச்ப்டைட்டில் போட்டு கால இடைவெளியை காட்ட்யிருக்க வேண்டாமா?

இந்த மரபையும் பிரேக் செய்கிறோம். நீங்களே புரிந்துகொள்ளவேண்டும்.


2. புருஷோத்தமன் குடும்பம் உயிரோடு தான் இருக்கிறது, அதோடு ஜூடாஸிற்கும் இதில் தொடர்பிருக்கிறது என்பதை ஜெ.கே எப்படி யூகிக்கிறார்?

விண்டோ ஏசி மெஷினின் பாதுகாப்பு கம்பிகள் கழன்று இருக்கிறது. அதனால் அவர்கள் த்ப்பியிருக்க வேண்டும். அவர்கள் இறந்ததாக நிருபணம் ஆகியிருப்பதற்கு ஜூடாஸின் உதவி இல்லாமல் முடிந்திருக்காது. ஆகவே அவரும் இதற்கு உடந்தை தான்.


4. புருஷோத்தமன் வீட்டிற்கு ஏன் எப்போதும் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டே செல்கிறார்கள்? பகலில் வெளிச்சத்தில் போனால் என்ன?

இருட்டில் போனால்தானே த்ரில்லா இருக்கும். இது என்ன கேள்வி?

5. வில்லன் ஏசி இறந்தபின் செல் அடிக்கிறது. அதில் “Daddy” என்று வருகிறது. ஆனால் அது அவரது மகள் தான் கூப்பிடுகிறார் என்று அனுமானிக்கமுடிகிறது. ஆனால் மகளின் நம்பரை “Daddy” என்றா அப்பாக்கள் பதிவு செய்வார்கள்?

ஏன் வைக்கக்கூடாதா என்ன? மகள் அவரை டாடி என்று அழைப்பதை சிம்பாலிக்காக குறிப்பதற்கு வைத்திருக்கிறார்.
( மிஷ்கின் யாரோ ஒரு அஸிஸ்டெண்ட்டை திட்டும் சத்தம் கேட்கிறது ).


ஆனால் பதில் தெரியாத சில கேள்விகள்.

1. ஹீரோ ஒரு சிறுவனின் உடலைத் தேடி மார்ச்சுவரிக்கு போகிறார். அங்கே அந்த உடல் இல்லை. ஏற்கனவே மகனது உடலுக்கு பதிலாக வேறு ஒரு உடல் மாற்றிவைக்கப்ப்ட்டு விட்டதே. பிறகு இது எதனால்?

2. புருஷோத்தமன் ஒருவரை மட்டுமே கொல்கிறார். தலைதுண்டிக்கப்பட்ட உடல் ட்ரம்மில் உள்ள ஹீரோ ஏற்கனவே பார்த்துவிடுகிறார். அப்போது கரப்ட் இன்ஸ்பெக்டர் எதை பார்த்து பயப்படுகிறார்?


3. இன்னும் நிறைய வில்லன்கள் பாக்கியிருந்தாலும், ஏன் புருஷோத்தமனும் அவரது மனைவியும் துப்பாக்கியுடன் உள்ள வில்லன் கோஷ்டியுடன் தற்கொலைக்கு சமமாக வெறும் கத்தியுடன் வெற்றுவெளியில் நேருக்குநேர் மோத ஓடிவருகிறார்கள்?










2 comments:

  1. அருமையான அலசல்! மிஷ்கின் படங்களில் இன்னொன்றும் குறிப்பிட்டுத்தானகவேண்டும். அவர் தன்னுடைய மானசீக குரு என்றுக் கூறிக்கொள்ளும் டகேஷியின் படங்களில் வரும் பாத்திரங்கள் போல, எப்போதும் தலை குனிந்துக் கொண்டேத்தான் நிற்கவேண்டுமா? உணர்ச்சி வசமான காட்சிகளில், 'குடு குடு கிட்ட என்று ஓடிவந்து' வேகமாகப் பேசுவதும், ஜப்பானிய படங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், நம்ம படங்களில் கொஞ்ச உறுத்தலாக இருப்பதை கவனித்தீர்களா? அந்த மாதிரியான செயற்க்கைத்தனமான சில காட்சிகளை குறைத்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லோரும் நல்லப் படம் என்று பாராட்டும்போது, ரொம்ப மேலே பறக்காமல், வாயை அடக்கி நிதானமாக இருந்து,நிஜங்களை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் இருந்துவிட்டால், உண்மையிலே உலகப் புகழ்ப் பெறலாம். நம்ம சகோதரனுக்கு நாம் சொல்லாமல் வேறு யார் சொல்லுவார்களாம். Keep it up மிஷ்கின்! நீங்களும்தான் பாலுசுந்தர்!

    ReplyDelete
  2. புருஷோத்தமன் வீட்டில் யாருமில்லாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும்... அதனால்தான் டார்ச் அடித்துக் கொண்டு செல்வார்கள்.. சரி விடை தெரியாத கேள்விக்கு வருவோம்.

    1. மாற்றி வைக்கப்பட்டதாக ஜெயப்ரகாஷின் பார்வையில் சொல்லப்படுகிறது. மூன்று பிணங்களை ஜெயப்பிரகாஷ் எடுத்து வந்து எரிப்பது நினைவிருக்கலாம். எனில் இன்னும் இரண்டு பிணங்கள் காணாமல் போயிருக்கும்.

    2. கரப்டட் இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, அச்சமயத்தில் கதை நடக்கும் இடமே புருஷோத்தமனின் தண்டனைப் பகுதி. தவிர, புருஷோத்தம் ஒருவரை மட்டும் கொல்லவில்லை... கைகளை அறுப்பதெல்லாம் யாராம்??

    3. டாக்டரும் அவரது மனைவியும் இறப்புக்காகத்தான் இந்த கொலைகளை செய்கிறார்கள். மிச்சமிருப்பவர்கள் அனைவரும் அந்த இடத்தில்தான் இருக்கிறார்கள். தாங்க்ள் இறந்தாலும் பரவாயில்லை ; அவர்கள் அனைவரும் இறக்கவேண்டும் என்று கையில் கத்தியுடன் செல்கிறார்கள். மற்ற படங்களைப் போல திடீரென துப்பாக்கியுடன் போகவில்லை என்பதைக் கவனிக்கவும்..

    ஒருசில சந்தேகங்கள் எனக்கும் உண்டு.. உதாரணத்திற்கு, சேரனின் தங்கையை எதற்காக காப்பாற்றி வைத்திருக்கவேண்டும்??? அதுவும் அப்பேற்பட்ட கூட்டத்தில்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...