பொங்கல் விடுமுறைக்கு சென்னையிலிருந்து பழனிக்கு பஸ்ஸில் சென்றேன். அப்போது “நாடோடிகள்” படம் போட்டார்கள். நாடோடிகள் ஒரு நல்ல யதார்த்தம் சார்ந்த படம். பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் கதையை இதில் வேறு கோணத்தில் ரீ-டெல் பண்ணியருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவின் காதலுக்கு உதவும் நண்பர்கள் தான் இதில் ஹிரோக்கள். இன்றைய சமூகசூழலில் இப்படத்தில் வரும் நண்பர்களைப் போன்றவர்களே ஹீரோக்கள் என்று சொல்லி, Out-of-the-World Heroism படங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ரசிகர்களை கவரமுயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளது.
இதே அலைகள் ஓய்வதில்லை படத்தை தெலுங்கில் பாதி ஆக்ஷன் பாதி காதல் படமாக உல்டா செய்தார்கள். அதை தமிழில் “ஜெயம்” ஆக ரீமேக் செய்தார்கள். ஆனால் ஜெயம் படத்திற்க்கும் நாடோடிகள் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?
உலகெங்கிலும் திரைப்பட ரசிகர்கள் கதை சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் ஹீரோயிஷம் சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். தமிழில் பெரும்பாலும் ஹீரோயிஷம் சார்ந்த கட்சியே ஆட்சியில் இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு இடைக்கால ஆட்சியாக கதைசார்ந்த படங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாடோடிகள் படம் அப்படி ஒரு இடைக்கால ஆட்சியில் வந்த படம்.
ஆமாம், நீங்கள் இதில் எந்த கட்சி?
No comments:
Post a Comment