Friday, January 28, 2011

கர்ணமோட்சம் : இந்திய கனவும் நவீன-மகாபாரத கதையும்

முதல் கனவு

அமெரிக்க கனவை இந்தியர்கள் காப்பியடிப்பதற்கு முன்னர் உத்தமமான ஒரு இந்தியகனவை உருவாக்க ஒரு முயற்சி நடந்தது 1899 வங்காளத்தில். புராணங்களில் மூழ்கிகிடக்கும் இந்தியர்களை எப்படி அறிவியல் சார்ந்த நவீனயுகத்திற்கு மாற்றுவது என்று யோசித்த விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ், ரபீந்தரநாத் தாகூருக்கு கர்ணனை ஹீரோவாக கொண்டு, மகாபாரதத்தை வேறு கோணத்தில் எழுதவேண்டி ஒரு கடிதம் எழுதினார். அதில் தேரோட்டியாக வாழவேண்டும் என்று தனக்கு விதிக்கப்பட்ட விதியை எதிர்த்து தெய்வங்களுடன் (மகாபாரதத்தின் ஒரிஜினல் ஹீரோக்கள் - கிருஷ்ணர், யுதிஸ்டர், அர்ஜுனன்) போராடும் மனித பாத்திரமே கர்ணன். 




சாதிக்கவேண்டும் என்ற வெறி, தனது சமூக அந்தஸ்தத்தை மீறிய கனவுகள், குடும்ப உறவுகளை தாண்டி தொழில்முறை உறவுகளே முக்கியம் என்ற எண்ணம், எல்லாவற்றிக்கும் மேலாக தன் தலையெழுத்தை தானே எழுத துணியும் துணிச்சல் போன்ற குணாதிசயங்கள் கொண்ட கர்ணனே நவீன பாரதத்தின் மிடில்கிளாஸ் மக்களின் ஆதர்ஷ ஹீரோ. இது புராண பாரம்பரியங்களையும் நவீனயுக எதார்த்தத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அருமையான கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்து தாகூர் கர்ணா-குந்தி-சம்பத் என்ற ஒரு குறுநாடகத்தை போருக்கு முன் கர்ணனும் குந்தியும் சந்திக்கும் சம்பவத்தை மட்டும் எழுதினார். தாகூர் இதை புதிய இந்திய கலாச்சார அடையாளங்களின் தொகுப்பின் பகுதியாக இதை அமைத்துக்கொண்டார்..


மகாபாரதத்தை ரீடெல் (Re-tell ) செய்யும் முயற்சி பலரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் படைப்பாளிகள் அந்தந்த காலகட்டத்தில் இருந்த இந்திய சமூகசூழலை அதில் பதிவு செய்கிறார்கள். இந்த மறுபதிப்புகளின் மூலம் பல மிடில்கிளாஸ் இந்தியர்கள் எல்லோரும் தங்களை கர்ணன் பாத்திரத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் தங்களை அர்ஜுனனாகவும் பாவித்துகொள்கிறார்கள்.

அர்ஜுனன் கோணம்:


அமிதாப் நடித்த தீவார் (தமிழில் ரஜினி நடித்த தீ), இந்த வரிசையில் ஒரு முக்கிய திரைப்படம். இதில் அமிதாப் கர்ணனின் சாயல் கொண்ட ஒரு கடத்தல்காரன் பாத்திரம். இவரை பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டராக, அவரது சகோதரன் (அர்ஜுனன் சாயலில்) பாத்திரத்தில் சசிகபூர். ஆனால் இப்படத்தில் கர்ணன் கெட்டவழியில் செல்லும் நல்லவனாகவும், இதை த்டுக்க முயலும் நல்லவன் அர்ஜுனனாக, அர்ஜுனனின் கோணத்தில் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது.


கர்ணன் கோணம்:


மகாபாரதம் கர்ணனின் கோண்த்திலும் பலமுறை படமாக்கப்ப்ட்டுள்ளது. Shyam Benegal-Girish Karnad,  KalYug என்று ஒரு படம் எடுத்தார்கள். தமிழில் “பட்டாக்கத்தி பைரவன்என்ற படத்தில் சிவாஜி மார்டர்ன் கர்ணனாக நடித்துள்ளார். பட்டாக்கத்தி பைரவனில் சிவாஜி செளகார்ஜானகியுடன் திரும்ணத்திற்குமுன் தவறுசெய்துவிட்டு பிறகு ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஜானகியோ குழந்தையை (இரணட்டாவது வேடத்தில் கர்ணன்-சிவாஜி) வேறுஇடத்தில் விட்டுட்விட்டு, மேஜரை கல்யாணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு பிறக்கும் ஜெய்கணேஷ்தான் அர்ஜுனன். இவர்களுக்குள் நடக்கும் மகாபாரதயுத்தம் தான் கதை. 

இக்க்தையின் சாயல் மணிரத்னம் ரஜினியை கர்ணனாக/தாதாவாக வைத்து எடுத்த தளபதியில் பலமாகயிருக்கிறது.



நித்தமும் மகாபாரதம்: கலவை கோணம்

இன்றைய சமூகசூழலில் நாம் ந்ம்மைவிட மேல்தட்டில் இருப்பவர்களுடன் மோதும் போது கர்ணனாகவும், நமக்கு கீழ் இருப்பவர்களுடன் மோதும்போது அர்ஜுன்னாகவும் நட்ந்துகொள்கிறோம். ஆக இன்றைய மகாபாரத்தில், நாம் எல்லோரும் பாதி அர்ஜுனன் பாதி கர்ணன் கலந்த கலவைகள். மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறோம் என்று பாஸிடிவாக இருக்கும் தருணங்களில் (India Shining காலங்களில்) அர்ஜுனன் கோணத்திலும், மிடில் கிளாஸ் மக்கள் கஷ்டப்ப்டும்போது (India Struggling காலங்களில்) கர்ணன் கோணத்திலும் நவீன் மகாபாரதம் கதைகள் படமாக்கப்படுகின்றது.

மேற்கண்ட படங்கள் எதிலும் தன்னைபோல திறமையும் த்குதியும் உள்ள கர்ணனை அதிகாரத்தை சாதகமாக பயன்ப்டுத்திக்கொண்டு, தில்லுமுல்லு செய்து தோற்கடித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லாதவனாக, தனது தவறுகளை உணராதவனாக காட்டப்பட்டிருக்கிறான். ஆனால் தனது பாவங்களை உணர்ந்த ஒரு அர்ஜுனன், தவறான பாதையில் செல்லும் கர்ணனை த்டுக்க நினைத்தால்?

அப்படி ஒரு கெட்ட அர்ஜுனன் (நரேன்) கெட்ட கர்ணன் (அஜ்மல்) கோணம் தான் மிஷ்கினின் அஞ்சாதே.


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...