Thursday, January 27, 2011

இளைஞன் : கதைக்கட்சியின் (கதைக்கரு மட்டும்) விமர்சனம்




முன்னுரை : படத்தின் திரைக்கதை, கதை சம்பவங்கள் நடிகர்களின் நடிப்பு, படத்தின் மேக்கிங், படத்தின் அரசியல் பின்னணி பற்றிய எதுவும் கருத்தில் கொள்ளாமல் கதை பற்றி மட்டுமே இந்த விவாதம்,


இளைஞன் கதையின் பின்புலம் ஒரு கப்பல்கட்டும் தளம். கதையின் காலம், இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த சில வருடங்களுக்குப்பின். இந்தியாவிற்கு அரசியல் விடுதலை கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் சென்றபின்னரும் அவரது அல்லக்கை சுரண்டல் முதலாளிகள் கப்பல்கட்டும் தொழிலாளிகளின் உழைப்பை உறுஞ்சுவதை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை.

இந்த படத்தை பொருத்தவரை கதையின் களனான கப்பல்கட்டும் தொழில் ஒரு உருவகமே. இந்த படத்தின் காலத்தை நிகழ்காலமாகவும், கப்பல்கட்டும் தொழிலை சாப்ட்வேராகவும், இங்கிலாந்து என்பதிற்கு பதிலாக அமெரிக்காவுமாக மாற்றி யோசித்துப் பாருங்கள். போன நூற்றாண்டிற்கும் இன்றைய நிகழ்காலத்திற்கும் அதிகம் மாற்றமிலலை என்பது புலப்படும். இந்த உண்மைதான் இந்த கதையின் சிறப்பு. இக்க்தையில் கப்பல்கட்டுதல் என்பது ஒரு உருவகம் (Metaphor) தான். இதை நான் மட்டும் சொல்லவிலலை. இந்து நாளிதழும்கூட சொல்கிறது. இதற்கொரு சபாஷ்.

காட்டுப்பூச்சி, ராக்கெட் ராஜா என்றெல்லாம் கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் கொண்ட இந்த கால ஹீரோகளிடையே கார்க்கி என்று
பெயர்வைத்திருக்கிறார் இந்த கதையின் ஹீரோ. இத்ற்கொரு சபாஷ்.

கப்பல் கட்டுவதும்  சாப்ட்வேர் உருவாக்குவதும் பலதரப்பட்ட மனிதர்கள் இணையும் ப்ரோஜட்கள். பல மாற்றுகருத்துக்கள் கொண்ட மனிதர்கள ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டும் ஒருவரொடு ஒருவர் இணைந்தும் செய்யும் கூட்டுமுயற்சி / போராட்டம். இதனை மையக்கருத்தாக கொண்ட திரைப்படம் த்மிழில் வந்ததாக எனக்கு நினைவில்லை. அதற்காக மேலும் ஒரு சபாஷ்போடலாம்.


பி.கு.: க்தையின் மற்ற கதாபாத்திரங்களை இன்றைய காலத்தில் ஏற்று நடிப்பவர்கள் யார் யார் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். சரியாக யூகிப்பவர்களுக்கு இந்த படத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் IRONY புரியும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...