Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Thursday, January 20, 2011

தமிழ்திரையுலகின் தழுவல்கலாச்சாரம்


 எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் முடிந்தபின் ரஜினி-கமல் காலம் 1980-களில் இருந்து இன்றுவரை நீடிக்கிறது. இவர்களின் சக்ஸஸ் பார்மூலாவைத்தான் விஜய்,அஜித் போன்றவர்கள் பாலோ செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.  ஒரு வலைதளத்தில் ரஜினி-கமல் பட கதைகளின் மூலம் பற்றி போட்டிருந்ததை பார்த்தேன். அந்த பட்டியல் இதோ..

Rajini Remakes

1.Moondru Mudichu- O Seetha Katha (Te)
2.Kuppathu Raja-Do Yaar (Hi)
3.Naan Vazavaipen-Majboor (Hi)
4.Billa-Don (Hi)
5.Natchathiram-Sivaranjani (Te)
6.Polladavan-Premade Kanike (Ka)
7.Thee-Deewar (Hi)
8.Thillu Mullu-Gol Maal (Hi)
9.Pokiri Raja-Chuttalunaru Jagratha (Te)
10.Pudhukavithai-Na Nina Mariyalare (Ka)
11.Adutha Varisu-Raja Rani (Hi)
12.Naan Mahan Alla-Viswanath (Hi)
13.Nallavanuku Nallavan-Dharmathmudu (Te)
14.Naan Sigapu Manithan-Aaj Ki Awaz (Hi)
15.Kai Kodukkum Kai-Katha Sangama (Ka)
16.Pathikathavan-Kuddhar (Hi)
17.Viduthalai-Qurbani (Hi)
18.Maaveeran-Mard (Hi)
19.Mr. Bharath-Trishul (Hi)
20.Naan Adimai Illai-Pyar Jhuktha Nahin (Hi)
21.Velaikaran-Namak Halal (Hi)
22.Guru Sishyan-Insaf Ki Pukar (Hi)
23.Dharmathin Thalivan-Kasme Vaade (Hi)
24.Siva-Khoon Pasina (Hi)
25.Maapillai-Athaki Yamudu Ammayiki Mogudu (Te)
26.Panakaran-Laawaris (Hi)
27.Adisaya Piravi-Yamudiki Mogudu (Te)
28.Dharmadhurai-Deva (Ka)
29.Mannan-Anuraga Aralidhu (Ka)
30.Annamalai-Kudh Karz (Hi)
31.Pandiyan-Bombay Dada (Ka)
32.Veera-Allari Mogudu (Te)
33.Baasha-Hum (Hi)
34.Muthu-Thenmavin Kombath (Ma)
35.Chandramukhi-Manichitrathazhu (Ma)
36.Arunachalam-Malamaal (Hi)
37.Thambikku Endha Ooru-A chiranjeevi film remake (Te)
38.Aarilirundhi Aruvadhu Varai-Remake of A Shobhan Babu Film (Te)
39.Kuselan-Katha Parayumbol (Ma)


Kamal Remakes

Avvai Shanmugi - Mrs Doubtfire
Panchathantiram - Very Bad Things
Nammavar - The Class of 1984
Virumandi - Life of David Gale
Pammal K Sambandam - The Bachelor
Vettri Vizha - Bourne Identity
Sathileelavathi - She Devil
Soora Samharam - Witness
Indian - Falling Down

இதில் என்ன பெரிய சங்கதி? இவ்விருவரின் படங்கள் 100% காப்பிகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் தழுவல்கள் தான். ஒன்றோ அல்லது இரண்டோ தழுவலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், இன்று விஜய் முதல் ஜெயம் ரவி வரை எல்லோரும் பெரும்பாலும் இதுமாதிரி தழுவல் படங்களில் தான் நடிக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் ஓரிஜினல் கதைகளுக்கு உரிய மரியாதை குறைகிறது. அதோடு தனித்துவம் வெளிபடுத்தும் இயக்குனர்கள் பெரும்பாலும் புதிய, அனுபவமில்லாத, நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களுடனேயே படம் எடுக்கவேண்டிய கட்டாயம். இயக்குனர்களுக்கான் ஸ்கோப் மிகவும் குறுகலாக ஆகிவிட்டது. ஒரு படம் தோற்றாலே இயக்குனருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திரையலக தயாரிப்பார்கள், பிளாப் மேல் பிளாப் கொடுக்கும் நடிகர்களையும் தாங்குகிறார்கள், இதுதான் கொடுமை.


தழுவல் படங்களில் இயக்குனர்களின் பங்களிப்பு மிகமிக கம்மியே (கொஞ்சம் ஆங்காங்கு திறைமை காட்டலாம்தான்..). இம்மாதிரி வரும் தழுவல் படங்களில் நடிகர்களின் பெர்பாமன்ஸே பிரதானமாகிறது. நடிகர்கள் இப்படங்களை தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. நடிகர்கள் கொஞ்சம் வளர்ந்தபின் ஒரிஜினல் கதைகளையும்கூட தங்கள் இமேஜ்ஜிற்கு தகுந்தவாறு மாற்றச்சொல்கிறார்கள். இப்படியே போகப்போக இயக்குனர்கள் டம்மீபீஸ் ஆகிறார்கள்.

நட்சத்திர நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே வியாபாரம் என்று இருக்கும் சூழலில், சொந்தமாகவோ அல்லது காப்பியடித்தோ கதை, திரைக்கதை எழுதி நடிகர்களை இம்பிரஸ் செய்து இயக்குனர்களாகி விடலாம் என்று கனவு காணும் உதவி இயக்குனர்களின் கதி? இதில் காமெடி என்னவென்றால், பெரும்பாலான உதவிடைரக்டர்கள் சொந்த ஊர்களில் இருந்து வாழ்க்கையையே பணயம் வைத்து சினிமாவிற்கு வருவதற்கான இன்ஸ்பிரேஷன் இதே நடிகர்கள்தான்.

ஓகே. இதையும் தாண்டி ஒரிஜினல் கதைகளுடன் இயக்குனர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பங்களிப்பில் வளரும் நடிகர்கள் நட்சத்திரங்களான உடன் இதே இயக்குனர்களுக்கு (நட்சத்திர நடிகர்கள் நடிக்காமல் எடுக்கப்ப்டும் படங்களுக்கு) போட்டியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இதனால் தான் என்னவோ இப்போதெல்லாம் இயக்குனர்களே நடிகர்களாகிவிட்டனர்.

திரைப்படங்கள் தான் இன்றைய சந்தைசார்ந்த கலாச்சாரத்தில் மிகப்பிரதானமான படைப்புக்கள். ஒரு நாவல் படம் ஆனால், ஒரு எழுத்தாளர் இன்ஸ்டண்ட் பிரபலம் ஆகும் காலமிது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு தழுவல் படம் எடுக்கப்படும்பொழுதும் ஒரு எழுத்தாளனின் (அல்லது எழுதி-இயக்குபவரின்) வாய்ப்பு பறிபோகிறது என்று தானே அர்த்தம்.

தழுவல் படங்களே கூடாது என்று சொல்லவரவில்லை. தழுவல் படங்களை மட்டுமே செய்வதை தான் தவறு என்கிறேன். தழுவல் படங்களில் நடித்தே தன் நட்சத்திர அந்தஸ்த்தை தக்கவைத்து கொள்வது “Same Side Goal” போட்டே சாதனை செய்ததாக நினைத்துக்கொள்வதற்கு சமம்.

ஒரு படங்களின் வெற்றிதோல்வியை நிர்ணயம் செய்வதில் இணையத்தின் பங்கு வளர்ந்துவரும் இந்த சமயத்தில், வலைப்பதிவர்கள் காப்பியடித்து படம் எடுப்பவர்களை (இந்த படங்களிலாவது துளியேனும் கதையிருக்கும்) கண்டிப்பதைவிட தழுவல் படம் எடுப்பவர்களை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்பது என் வாதம்.




Tuesday, January 18, 2011

தமிழ் சினிமா ரசிகர் கட்சிகள்


பொங்கல் விடுமுறைக்கு சென்னையிலிருந்து பழனிக்கு பஸ்ஸில் சென்றேன். அப்போது “நாடோடிகள்” படம் போட்டார்கள். நாடோடிகள் ஒரு நல்ல யதார்த்தம் சார்ந்த படம். பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் கதையை இதில் வேறு கோணத்தில் ரீ-டெல் பண்ணியருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவின் காதலுக்கு உதவும் நண்பர்கள் தான் இதில் ஹிரோக்கள். இன்றைய சமூகசூழலில் இப்படத்தில் வரும் நண்பர்களைப் போன்றவர்களே ஹீரோக்கள் என்று சொல்லி, Out-of-the-World Heroism படங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ரசிகர்களை கவரமுயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளது.

இதே அலைகள் ஓய்வதில்லை படத்தை தெலுங்கில் பாதி ஆக்‌ஷன் பாதி காதல் படமாக உல்டா செய்தார்கள். அதை தமிழில் “ஜெயம்” ஆக ரீமேக் செய்தார்கள். ஆனால் ஜெயம் படத்திற்க்கும் நாடோடிகள் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?

உலகெங்கிலும் திரைப்பட ரசிகர்கள் கதை சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் ஹீரோயிஷம் சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். தமிழில் பெரும்பாலும் ஹீரோயிஷம் சார்ந்த கட்சியே ஆட்சியில் இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு இடைக்கால ஆட்சியாக கதைசார்ந்த படங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாடோடிகள் படம் அப்படி ஒரு இடைக்கால ஆட்சியில் வந்த படம்.

ஆமாம், நீங்கள் இதில் எந்த கட்சி?

Thursday, January 13, 2011

காப்பியும் இன்ஸ்பிரேஷனும்

 

மணிரத்னத்தின் ஆயுத-எழுத்து படம் Alejandro González Iñárritu.வின்
Amores perros என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஆனால் மணிரத்னம் காப்பியடித்துவிட்டார் என்று யாரும் குற்றம்சாட்டவில்லை. ஆனாலும் Amores perros தான் ஆயுத-எழுத்தின் இன்ஸ்பிரேஷன் என்று ஆயுத-எழுத்தின் விக்கீப்பீடியா பதிவே சொல்கிறது. 

  

 

சிம்புவின் “வானம்”, தெலுங்கில் வந்த “வேதம்” படத்தின் ரீமேக். இந்த வேதம் படத்திலும் Amores perros உடைய தாக்கம் உள்ளது. அதே போல தனுஷின் ஆடுகளம் படத்திலும் Amores perros உடைய தாக்கம் உள்ளது என்று அதன் இயக்குனர் வெற்றிமாறனே ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டுள்ளார். ஆக Amores perros படத்தின் தாக்கம் பல தமிழ்படங்களில் உள்ளது.

இந்த Amores perros படத்தின் இன்ஸ்பிரேஷன் எது?

 

F. Scott Fitzgerald  என்ற நாவலாசிரியரின் 1925இல் வெளிவந்த Great Gatsby என்ற ஒரு ஆங்கில நாவல். Great Gatsby நாவலில் ஒரு கார்விபத்து அந்த நாவலின் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத பல கதாபாத்திரங்களின் வாழ்வை புரட்டிபோட்டுவிடுகிறது. இந்த ஒரு கதைமுடிச்சை மட்டும் எடுத்துகொண்டு Alejandro González Iñárritu தனது Amores perros  படைத்தார். வானம் படத்தில் கார் விபத்திற்கு பதிலாக ஒரு தீவிரவாத சதி திட்டம். ஆடுகளத்தின் களனான சேவல் சண்டை
Amores perros  படத்தில் வரும் நாய் சண்டையை ஒத்து உள்ளது.

ஆக ஒரு படத்தின் plot யை எடுத்துக்கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். அதே போல் ஒரு படத்தில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதுவும் இன்ஸ்பிரேஷனே. ஆனால் plot உடன் சம்பவங்களையும் எடுத்துக்கொண்டால் அது காப்பி. சமீபத்தில் வந்த நந்தலாலாவும் யோகியும் காப்பியடித்த படங்கள் என்பது இதனாலேயே.

இன்னொரு படத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆகாமல் ஒரு நாவலை படித்து இன்ஸ்பியர் ஆகி ஒரு நல்ல படத்தை கொடுத்தால் அந்த இயக்குனரை ஒரு தரமான படைப்பாளியாக் உலகமே ஏற்றுக்கொள்கிறது என்பதை ஏனோ நமது இயக்குனர்கள் உணர்வதேயில்லை என்பது வருத்ததிற்கு உரியது.

Wednesday, January 12, 2011

காப்பியடிப்பது நல்லது !

தமிழ் திரை உலகின் மேல் பதிவாளர்களின் பொதுவான ஒரு குற்றச்சாட்டு என்னவேன்றால் திரை உலகினர்கள் மேலைநாட்டு கதைகளை திருடுகிறார்கள் என்பதே. ஆனால் இந்த கதைதிருட்டை ஏன் எப்போதும் தவறானது என்று சொல்கிறார்கள்? உலக இலக்கியங்களை தமிழிற்க்கு கொண்டுவருவது எப்படி தவறாகும்?
Franz Kafka வின்   Metamorphosis ஒரு மிக சிறந்த இலக்கிய படைப்பு என்று யாரும் ம்றுக்க முடியமா? இந்த கதையை தான் தமிழில் சமீபத்தில் அஜித்தை வைத்து  எடுத்தார்கள். ஆனால் அதை ஏனோ இலக்கிய வட்டமும் பதிவர்களும் பெரிதாக கொண்டாடவில்லை.
Franz Kafka வின்   Metamorphosis யில் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து ஒரு நாள் விழித்துப் பாத்தால் ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அதனால் அவன் படும் கஷ்டங்களையே அக்கதை விவரிக்கிறது. இந்த கதையை கொஞ்சம் மாற்றி Ferdydurke என்ற ஒரு நாவலை  Witold Gombrowicz, என்ற போலந்து நாட்டு எழுத்தாளர்  1937.ல் எழுதினார். இதில் ஒரு 30 வயது இளைஞன் திடீரென ஒரு டீனேஜ் வயதினன் ஆகி ஸ்கூலில் சேர்க்கப்ப்டுகிறான். அங்கு அவன் மத்த பசங்களிடம் மாட்டிக்கொண்டு படும் வேதனை தான் அதன் கதை. 
இந்த கதையை ஹாலிவுட்காரர்கள் “Never Been Kissed” என்று Drew Barrymore என்னும் நடிகையை வைத்து ஒரு மசாலா படமாக எடுத்தார்கள். இதில் ஒரு பெண்கள் பத்திரிக்கை நிருபரை, அண்டர்கவர் ஆப்பரேஷ்னாக ஒரு ஹை ஸ்கூலிற்கு அனுப்பி, அவ்வயது யுவதிகளின் எண்ணங்களை பற்றி எழுத பணிக்கிறார்கள். அந்த நிருபர் படும் வேதனைகளும் சோதனைகளும் தான் கதை.
இந்த கதையை ஹிரோயிஷம் கதையாக மாற்றி ஷாருக்கானை வைத்து ஹிந்தியில “மேன் ஹுன்னா” என்று ஹிந்தில் எடுத்தார்கள். இதில் ஒரு ஆர்மிமேனாக வரும் ஷாருக்கை  ஒரு மாணவனாக காலேஜிற்கு அனுப்பிகிறார்கள். அங்கே ஷாருக் எப்படி அவரது தங்கையையும் மற்றவர்களையும் சமாளிக்கிறார் என்பதே அதன் கதை. இந்த கதையைத்தான் “ஏகன்” என்று அஜித் நடித்தார். மொத்தத்தில் “ஏகன்” “metamorphosis” தானே.. சுற்றிவளைத்து பார்த்தால் ஒரு உலக இலக்கியத்தை தமிழிற்கு கொண்டுவந்த பெருமை அஜித்திற்கு உள்ளது என்பதை யாரேனும் மறுக்கமுடியாமா?

ஆக காப்பியடிப்பது சில வேளைகளில் நல்லதே....
Related Posts Plugin for WordPress, Blogger...