ஒரு பாடல் ஆகட்டும், ஒரு படம் ஆகட்டும் அல்லது ஒரு புத்தகம் ஆகட்டும் – எந்த ஒரு கலைபடைப்பையும் யாரும் எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் படைக்கமுடியாது. தனக்கு முன் வந்த படைப்பாளிகளின் படைப்புகளில் தனக்கு பிடித்த சிந்தனைகளுடன் தனது சிந்தனைகளையும் சேர்த்தும், ஆனால் அவர்களின் தாக்கம் வெளிப்படாமல் மறைத்தும் படைப்பது ஒரு முன்னுக்குபின் முரண்பாடான செயல். இதை படைப்பாளியின் அவஸ்த்தை (anxiety of influence) என்கிறார் ஹரால்டு புளூம் (Harold Bloom).
ஆனால் காப்பியடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என்று சொல்லிவிட்டு தைரியமாக காப்பிஅடிப்பவர்களும் உண்டு. தனது படைப்பின் தாக்கத்தை ரசிகனிடமே வெளிபடுத்தும் வகையில் ஒரு படைப்பை அமைத்துவிட்டு, ஆனால் அதிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்துவது தான் ரீமிக்ஸ் (remix). இசைக்கு ரீமிக்ஸ் போல் திரைபடத்திற்கு ரீமேக் (Remake). நான் குறிப்பிடும் ரீமேக் , தமிழிலேயே வந்த திரைப்படத்தை திரும்பவும் எடுப்பது.
பில்லா மற்றும் நான் அவன் இல்லை போன்ற படங்களின் டைரக்டர்கள் எல்லோர்க்கும் தெரிந்த கதையை திரும்பவும் எடுத்தாலும் அதில் தங்களது தனித்துவததை காட்ட தவறவில்லை. ஆனால் பாலைவனச்சோலை படம் தோற்றதும் இந்த டிரண்ட் நின்றுவிட்டது.
No comments:
Post a Comment