Friday, January 21, 2011

தமிழ்படம் பார்ட்-2 : ஒரு தழுவல் ஸ்கிர்ப்ட்



ஓப்பனிங்: ஹீரோ ஒரு நடிகர். சென்னையில் இருந்து கிளம்பி சென்னைக்கே வருகிறார். அப்பா குடுத்த துட்டில், நண்பர்களோடு சேர்ந்து ஒரு சூப்பர் ஆக்‌ஷன் படம் எடுக்கிறார். படம் புட்டுக்குகிறது. Shock.

ஸீன் ஒன்று:
சலைக்கமறுக்கிறார் நடிகர். தத்துபித்தென்று அன்றைய நட்சத்திரநடிகர்களை காப்பியடித்து நடிக்கமுயன்று தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி. (ஓரு இன்ஸ்பிரேஷன் சாங்..- தோழா.. வானம்தூரமில்லை.. தோழா, வாழ்ந்து பார்ப்போம் வாடா.. (போல))

ஸீன் இரண்டு: ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டரை எதேட்சையாக சந்திக்கிறார். நீ தாண்டா ஹீரோ. ப்ரோடியூசர் கூட ரெடி.!!! .. என்கிறார். (வெண்ணிறாடை தேவதைகள் பேக்கிரொண்டில் ஒரு நூறு பேர்கள் ஓடுகிறார்கள். ஒரு ரீமிக்ஸ் சாங்.)

டைரக்டர் சொல்படி கேட்டு மிகுந்த சிரத்தையுடன் நடிக்கிறார் டூப்பே போடாமல் சண்டைபோடுகிறார். படம் வெற்றியடைந்ததும், மற்ற டைரக்டர்கள் மொய்க்க, ஒழுங்காக சிரத்தையுடன் கதைகளைக் கேட்டு, பலரது ஆலோசனைகளையும் கேட்டு, கதைகளை தேர்வுசெய்து தொடர்ந்து இரவுபகல் பார்க்காமல் நடிக்கிறார். அதில் சில படங்கள் ஓடுகிறது, சிலது  இயக்குனர்கள் சொதப்புவதால் ஓடாமல் போகிறது. சந்தை மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடுகிறது. (விறுவிறுப்பான மாண்டேஜ் அண்ணாமலையில் ரஜினி முன்னேறுவது போல)

ஒரு நடிகை தொடர்ந்து நடிகருடன் மூன்று படங்களில் நடிக்கிறார்.. (ஒரு நல்ல குத்துபாட்டு சாங்)

ஸீன் மூன்று: மற்ற தென்மாநிலங்களில் ஓடிய படத்தின் கதையை த்ழுவி ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்திற்கான கதையை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க ஒரு டைரக்டர் (ஏற்கனவே பலரிடம் க்தை சொல்லி ரிஜக்ட் செய்யப்பட்டவர்) முன்வருவார்கள். அடுத்தலெவல் போக அருமையான் வாய்ப்பு என்று உடனிருப்போர்களும் ஆமேதிக்க, ஒரு புதிய ஆக்‌ஷன்ஹீரோவாக அவதரிக்கிறார் நம்து நடிகர்.

ரிலீஸ் தேதி..(திக்..திக்..திக்..- டென்ஷன்)

பலத்த ஓசையுடன் ஹை பிட்சில் ஒரு கரகோஷம்.. ஒரு விடலை ஓடிவருகிறான்..- “படம் சூப்பர்ஹிட்..

ஒரு புதிய தளபதி பட்டம். தெருவெல்லாம் பேனர்கள்..  தமிழகம் எங்கிலும் விடலைகள் நடிகருக்கு ரசிகர்மன்றம் வைக்கிறார்கள்.

(நாலைந்து வெள்ளைகாரிகள் துரத்தியும், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஒரு மலையாள ஹீரோயினுடன் ஒரு டூயட் சாங்)

ஸீன் நான்கு: ஒரு (Undercover Action Sequence) படம் ஹிட்டானதால் மேலும் பல தழுவல்படங்கள் உருவாகுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்ச் டைலாக்குகளும, போஸ்களும், ஹிரோயின்கள் இரண்டு, மூன்று என்று எகிருகிறது(சம்பளத்தைப்போல).
முருகன், விநாயகன், சிவன், மகாவிஷ்ணு போன்ற தெயவங்களின் வழித்தோன்றல் நமது நடிகரே என்பதை விளக்கி பல கவிஞர்கள் பாடல்கள் எழுதுவார்கள்.

(கந்தா.. கடம்பா.. சிங்காரவேலா சாங்கையும், காக்க காக்க கடவுளடா சாங்கையும் மிக்ஸ் செய்து ஒரு க்ரூப் சாங்)

ஸீன் ஐந்து : புதிதாக வந்த ஒரு வடநாட்டு நடிகையுடன் நெருக்கம் என்று கிசுகிசு நியூஸ்பேப்பரில் வருகிறது. அதைபார்த்த முதல் ஹீரோயின் ஷாக் ஆகிறார். நடிகரிடம் வந்து ஆவேசமாக சண்டைபோடுகிறார்.. அப்போது நடிகர் தனது படங்களை ஓடவைக்க தான் செய்த UnderCover Operation தான் இது என்று விளக்குகிறார். ( உயிரின் உயிரே, உயிரின் உயிரே. நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.. டூயட் சாங்) சாங் முடியம்போது திடீரென நடிகர் அப்பா பார்த்துவிடுகிறார்.. (Shock)

நடிகைபோனதும், “அப்பா, இப்ப ஏன் டென்ஷனாகரீங்க.. undercover operation கிசுகிசு மட்டும் இல்லை.. இப்ப இந்த நடிகைகிட்ட பேசினதும் undercover operation தான்.. புரியாதா.. அப்பாவிற்கு மீண்டும் Shock…


ஸீன் ஆறு: நடிகரே இப்போது மற்ற மொழிகளில் என்ன படம் ஓடுகிறது என்பதை கவனித்து தன் கதை ஞானத்தை வளர்த்துக்கொள்கிறார். இதற்குபிறகு தனது ரேன்ச்சிற்கு எந்த கதை சரிப்படும் என்பதை நிர்ணயம்செய்யும் திறமை வளர்ந்துவிடுகிறது
நடிகர் கார் வெள்ளை மாருதியிலிருந்து கிராகிக்ஸில் மாறி ஒரு டொயோட்டா லான்சர் ஆகிறது.. பிறகு மீண்டும் மாறி ஒரு பென்ஸாகிறது.. பிறகு மீண்டும் மாறி ஆடி காராகிறது.

அப்போது ஒரு பீச் பங்களா.. நடிகனுடைய சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடிபேசுகிறார்கள்.

பிசினஸ்மேன் ஏய்.. இந்த நடிகன் என் சேனலிலேயே ஆடிட்டு, என்னை முந்திக்கிட்டு எனக்குமுன்னாடியே ஆடி கார் வாங்கிட்டான்.. த்மிழ்நாட்டில எதிலையுமே நான் தான் நம்பர் ஒன்னா இருக்கனும்.. அதுனால அவன ஒழிச்சே ஆகனும்..

தாதா தலைவரே.. அவன பேசாம போட்டிரவா..

அரசியல்வாதி நான் ஒரு சாணக்கியன்.. பத்துவருஷங்களிச்சு என்ன நட்க்கும்கிறதகூட என்னால கணிக்கமுடியும்.. இந்த பொடியனால தான் எனக்கு.. சேனலிலிருந்தே இவன ஓரங்கட்டு

பிசினஸ்மேன் குடித்துகொண்டிருந்த வொய்ன்கிளாஸை வீசி டீவி ஸ்க்ரீனை உடைக்கிறான்.

இடைவேளை...

ஸீன் ஏழு: நடிகரின் பங்களாவின் ஸ்விம்மிங் பூல். இரவு. 

காமெடி பீஸ் - நீ ஜெய்ச்சுடடா மச்சான்
நடிகர் “இருந்தாலும் என்னமோ ஓன்னு குறையுதேடா மச்சான்

என்று சொல்லும் தருவாயில், அவருக்கென்றே ஒரு கதையை (சொந்தமாகவா இல்லை ஏதோஒரு ஆங்கில படத்தை த்ழுவியா என்று தெரியவில்லை) உருவாக்கி, சமீபத்தில் ஹிட் கொடுத்து, டிரெண்டில் இருக்கும், வளர்ந்துவரும் ஒரு இளம் டைரக்டர் கதை சொல்லவருகிறார்.

டைரக்டர் - “ஓப்பன் பண்ணினா... கட்.

படம் பிளாட்டின் ஜூப்பிளி..

இப்படம் வெற்றிபெற்றதும் நடிகரின் ஆதர்ஷ வேற்றுமொழி ஹீரோ இவரது படத்தை தழுவி அவர் படம் எடுப்பார். நமது நடிகர் அந்த மாநிலத்திற்கு சென்று பல விழாக்களில் பங்கேற்று அகில இந்திய நட்சத்திரமாக உயர்வார். பல பல்கலைகழகங்கள் இவரை போற்றி டாக்டர் பட்டங்களை வாழ்த்திவழங்குகிறார்கள்


அதே பீச் பங்களா.. இப்போது நடிகனுடைய லேட்டஸ்ட் சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடியிருக்கிறார்கள்.


அரசியல்வாதி “என்னமோ சேனல் இருந்தே தூக்கிடுவேன்னு சொன்ன.. என்ன ஆச்சு..இப்பவும் ஹிட்மேல ஹிட்..

பிசினஸ்மேன் “இன்னைக்கு யூத்தெல்லாமே இவன்பக்க தான் இருக்காங்க.. இவன கட்பண்ணினா சேனலே படுத்திரும்போல இருக்கே..

பிசினஸ்மேன் தாதாவை பார்த்து கத்துகிறார் “தூக்றா அவன..
தாதா யெஸ் பாஸ்.என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் டீவியை அப்படியே அள்ளிக்கொண்டு வெளியே போகிறார்.

Fade Out. Fade in.

ஸீன் எட்டு: சில வருடங்கள் ஆன பின் திரையுலகில் டிரேண்ட்கள் மாறுகிறது, டெக்னாலஜிகள் மாறுகிறது, கதை சொல்லும் யுக்திகள் மாறுகிறது. பல புதிய தளபதிகள் கிளம்பு வருகிறார்கள். ஆனால் கொஞ்சம்கூட மாறவேமாறாமல், சற்றும் சலைக்காமல் இவற்றையெல்லாம் நடிகர் சமாளிக்கிறார், தனது ரசிகர் பரிவாரங்களுடன்.

ஆனால் ரசிகர்களுக்கு வயதாகவயதாக, ஜுனியர் தளபதிகளின் புதிய கவர்ச்சியால் நடிகர்க்கு ஒரு சில சரிவுகள் எற்படுகிறது. ஆனால் நடிகர் அசர மறுக்கிறார். பஞ்ச் டைலாக்குகள் போதவில்லை.. மேலும் சில படங்கள் ஊத்திக்கொள்கிறது.

அதே பீச் பங்களா.. லேட்டஸ்ட் சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஆனால் அது நமது ஹீரோவுடையதில்லை. வேறு ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகருடையது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடியிருக்கிறார்கள். ஆனால் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிசினஸ்மேன் “ எப்புடி. ஜெய்ச்சுடோம்ல.. எப்போதுமே நாமதான் நம்பர் ஒன்.

தாதா “ எப்புடி பாஸ் மக்கள் இவன்யெல்லாம் ஹீரோவா ஏத்துக்கிறாங்க?

அரசியல்வாதி “அதெல்லாம் உனக்கு புரியாது. விட்டுரு.

பிசினஸ்மேன் சிரிக்கிறார். “சாங் சரியா கேட்கலையே.. கொஞ்சம் சத்தாமா வை..

தாதா டீவி வால்யூமை கூட்டுகிறான். எல்லோரும் நக்கலாக சிரிக்கிறார்கள்.

ஸீன் ஓன்பது:

நடிகர் “எவண்டா இவன்.. நம்ம படம் ரிலீஸ் பண்ணறப்போயெல்லாம் இவனும் ரிலீஸ் பண்றான்..எப்பிடி? இதுக்கு காரணமான அரசியல் ச்தியை எப்படி ஒரேஒரு பிர்லியண்ட் ஸீன்ல ஒடைக்கிறேன்.. பாரு.. கூப்பிடு பிரஸ்ஸை

நடிகர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.

எனக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியை விரைவில் அரசியலுக்கு வந்து எதிரிகளின் ஆட்டத்தை, என் படத்தில் வரும் வில்லன்களை அடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட வேகமாக அடித்து வீழ்த்துவேன்

ஒரு தனி ஜெட்டில் ஏறி டெல்லியில் யாரோ ஒரு மர்மமான நபரை நடிகர் சந்திக்கிறார்.

ஜுனியர்விகடன்களும் நக்கீரன் சூடாகப்பேட்டிகளும் சர்வேக்களையம், வருவாரா மாட்டாரா என்ற யுகங்களையும் “வருவார் ஆனால் வரமாட்டார்என்ற ரீதியில் கட்டுரைஎழுதி ஊரல்லாம் நடிகரைப்ப்ற்றி பரபரப்பாக்குகிறார்கள். சந்தடிசாக்கில அவர்களும் காசுபார்க்கிறார்கள். (அந்த வானத்தப்போல திறமை  படைத்த வல்லவரே சாங் )


ஸீன் பத்து: எல்லோருமே டூப்பு நான் தாண்டா டாப்பு என்று சொல்லி இதற்கு பின் தனது படங்களில் கதை மட்டுமல்ல வசனங்களையும் (மாறிவரும் அரசியல் பின்னனிக்கேற்ப்ப) நடிகரே எழுத ஆரம்பிக்கிறார். ப்ராக்ஸியாக செய்துகொண்டிருந்த டைரக்சன் பணியை வெளிப்படையாக செய்கிறார். ரசிகர்கள் ரிலீஸ் நாளிலேயே ஸில்வர் ஜூப்ளி கொண்டாடுகிறார்கள். 

(நடுநிலையான) ஊடகங்கள் சிலது ஆதரித்தும், எதிரிகளின் ஜால்ரா ஊடகங்கள் நக்கல்செய்தும் எழுதுகிறார்கள். இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன உனக்கென்ன்..என்று தொடங்கும் பாடலுக்கு அர்த்தம், டெல்லியல் கூட்டணி அமைத்து தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருப்போகிறேன் என்பதே என்று ஒரு அரசியல் ஆலோசகர் NDTV யிற்கு பேட்டி கொடுக்கிறார்.

பொதுமக்களோ குழம்பிப்போய் உண்மையை நேரடியாக தாங்களே கண்டுபிடிக்கிரேன் பேர்வழி என்று சொந்தக்காசை செலவளித்து தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள். ஆனந்தவிகடனில் “
தமிழ்படம் பார்ட்-2:ஒரு நடிகர் டைரக்டராகிறார்என்று ஏன் டைட்டில் வைத்துயிருக்கிறார்கள் என்று கேள்வியும் கேட்டு, படத்திற்கு 60 மார்க் கொடுக்கிறார்கள்.

Cut.

பிசினஸ்மேன் “டெல்லிக்கு போகிற எல்லா பிளைட்டும் நம்மளோடது. அப்படி இருக்கும்போது இவன் எப்பிடிடா டெல்லிக்கு போனான்? எப்பிடிடா எப்பிடி...

அரசியல்வாதியும் தாதாவும் முழிக்கிறார்கள்.

Cut.

நடிகன் “லோக்கல் சேனல்ல போடாட்டியென்ன.. நெஷனல் சேனல்ல வ்ருவோம்ல



எப்போதும் போல் படங்களில் வருவதுபோல நடிகருக்கு சுபம் தான்.

End.


இதுதான் ஒரு நடிகர் டைரக்டராகும் ஸ்கிர்ப்ட. பாஸ், இந்த கதை பல தலைமுறைகளாக ஹிட்டாகிகொண்டிருக்கும் கதை. Evergreen formula.

பி.கு. :
இந்த படம் குஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த படம் ஒரு ஹைதர்கால கதையின் காப்பி என்று நெட்டில் பதிவர்கள் கிழிகிழியென்று கிழித்தார்கள். ஆனால். சாரி பாஸ். நம்ம நடிகரும் சரி விடலைபசங்களும் சரி இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஆனந்தவிகடனே இந்த படத்திற்கு 60 மார்க் கொடுத்திருக்கான்.. கொய்யால்லே எவண்டா இந்த வலைபதிவர்கள்? என்றதாக கேள்வி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...