Sunday, January 30, 2011
Saturday, January 29, 2011
சிறுத்தை – Inception - ஒரு கதை ஒப்பீடு
ஓரு திறமை வாய்ந்த திருடன் – எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ஒரு பொருளை லவட்டிக்கொண்டு வந்துவிடுவான். அவனுக்கு ஒரு சவால் – எதிரிகளை அழிக்க ஒரு பொருளை அவர்களது தலைமையகத்தில் வைத்துவிட்டு வரவேண்டும். இந்த கடுமையான சவாலை சாகசமாகச் செய்துமுடிக்கிறான் திருடன்.
இது சிறுத்தை/விக்ரமுடுவின் கதை தானே.. இதேதான் Christopher Nolan னின் Inception படத்தின் மையக்கரு. என்ன அதில் பொருள் என்று சொல்லப்படுவது ஒரு எண்ணம்/Idea. சுற்றி வளைத்து என்ன சொல்லவருகிறேன் என்று நினைத்தீர்கள்? சிறுத்தை படம் Inception னை பார்த்து திருடிவிட்டார்கள் என்று தானே? சாரி. அது தான் இல்லை. விக்ரமுடுவை கதையை திருடி Inception எடுத்துவிட்டார்கள் என்கிறேன்.. இந்த உலகமய்மான காலத்தில் அமெரிக்கர்களும் நம்ம படங்களை பார்த்து காப்பியடிக்க வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா?
ஜோக்கை விட்டுவிட்டு சீரியஸ் மேட்டருக்கு வருவோம். ஒரே கதை கருவை அமெரிக்கர்கள் எப்படி சைக்காலஜி, டெக்னாலஜி, சைன்ஸ்பிக்ஷன் எல்லாம் சேர்த்து புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் மாஸ் படமாகவும் எடுக்கிறார்கள். சிறுத்தை படத்தின் டைரக்டர் ஜெயா டீவியில் பேசும்போது மாஸ் ஆடியன்ஸுக்காக எடுக்கும்போது இப்படிதான் எடுக்கமுடியும் என்றார்.
இரட்டை வேடம், எல்லோரையும் மட்டம் தட்டும் ஜோக்ஸ், குத்துபாட்டு இதெல்லாம் இல்லாமல் வந்த மைனா படம் மாஸ் ஹிட்டாகவில்லையா? மசாலா ஐட்டங்கள் தவிர்த்து, மாஸும் ரசிக்கும் கிளாஸாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம் சிறுத்தை...
உலகின் மிகச் சிறிய தமிழ் சிறுகதை
Ernest Hemingway உடைய உலகிலேயே மிகச்சிறிய சிறுகதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு செய்திருக்கிறோம். நாம் ஏன் உலகிலேயே மிகச் சிறிய தமிழ் சிறுகதை எழுதக்கூடாது என்று நண்பர் ஒருவர் சொன்னார். அவரோடு பல நாட்கள் டிஸ்கசனில் இறங்கி, யோசித்ததன் பலன்:
பூக்கொண்டுவருகிறாள் கல்லறைக்கு, துரோகி.
எழுதீட்டோம்ல... எப்பூடீ...
The Incredibles - இந்திய கனவும் ராமாயண கதையும்
“The Great American Dream”, அமெரிக்க-கனவு என்பதே அமெரிக்க சமூகத்தின் அடித்தளம். ஒரு வீடு, ஒரு கார், காலத்திற்கு எற்ப உபகரணங்கள், இரு குழந்தைகள், வசதியான வாழ்வு etc.... இதுவே அமெரிக்க புத்தகங்கள், நாவல்கள், திரைப்படங்கள், விளம்பரபடங்கள் என்று அத்தணை கலாச்சார பொருட்களின் அடிநாதம் இந்த அமெரிக்க-கனவே. ஆனால், இந்த அமெரிக்க கனவின் அடிநாதம் “Nuclear Family” - ஒரு தந்தை, ஒரு தாய், இரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.
ஆனால் இன்று 60% மேல் அமெரிக்காவில் குடும்பங்கள் “Single Parent Family” என்கிற ஒரு பெற்றோர் மட்டுமே இருக்கும் குடும்பங்கள். பொருளாதர ரீதியாக மட்டும் அல்ல, சமூகரீதியாகவும் அமெரிக்க கனவு வெறும் கனவே என்பது தான் இன்றைய அமெரிக்க யதார்த்தம். அமெரிக்க கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக துரத்தும் நம்து இன்றைய தலைமுறையினர் அமெரிக்க-யதார்த்தத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றனர். இந்தியாவில் 2020ல் “Single Parent” குடும்பங்கள் கண்டிப்பாக கணிசமான அளவில் இருக்கும் என்று சமூகவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சரி, இத்தனை நாட்கள் நமது இந்திய சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி தான் இந்தியர் பண்பாடு என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்தது எது தெரியுமா? நம் கதைகளே. அதில் ராமாயணத்தின் பங்கு கணிசமானது ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தும் கதைகள் எத்தனையோ இருந்தாலும், அக்கருத்தின் SuperHero ராமன் தான்..
சமூகத்தில் ஒரு குடும்பத்தை கட்டிகாப்பதே பெரியஹீரோயிஸம் என்பதை தான் ராமாயணம் சொல்கிறது. ராமனின் சோதனைகள் – காட்டுக்குச்செல்வது, மனைவி கடத்தப்ப்டுவது, கர்பிணியான மனைவி பிரிந்துசெல்வது, குழந்தைகள் த்ந்தையை அறியாமல் காட்டில் வளர்வது ஆகியன எல்லாம் அவன் குடும்பக்கஷ்டங்களே அன்றி சமூக பிரச்சனைகள் அல்ல. ராமாயணத்தின் முக்கியமான கரு குடும்பங்கள் பிரிவதும் பின் பல தடைகளை தாண்டி சேர்வதுமே. சென்ற தலைமுறையில் இந்த கருவை தாங்கித்தான் பல எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்கள் வந்தன. இந்த வரிசையில் வந்த இன்றைய மகாநதி, ஈசன் போன்ற படங்களின் முடிவுகளையும் எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்களின் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால், இன்று ராமயண தீம்களிலிருந்து நாம் எத்தனை தூரம் விலகிக்கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.
ஆக, இன்று நாம் வேறு கதைகளை பேசிக்கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது மனிததத்துவம். போன தலைமுறையில் ராமாயணம் டீவியில் வந்தபோது ஞாயிற்றுகிழமைகளில் வாழ்க்கையே ஸ்தம்பித்தது. இந்த தலைமுறை ராமயணம் ரீமேக்கை பார்ப்பார் யாருமிலலை. ஒருவனுக்கு ஒருத்தி ஐடியலிஸத்தின் தீவிரவாதியான விக்கிரமனின் பூவே உனக்காக போன்ற படங்கள் இன்றைய சூழலில் தோற்பதும், இன்றைய கலாச்சாரத்தின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்கும் கரு.பழனியப்பனின் மந்திரபுன்னகை படத்தின் நிதர்சனமும் நம் கலாச்சாரமும் நம் பொருளாதாரத்தை போல மேற்கு நோக்கியே போய்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
கதைகள் மாறினால் சமூகமும் மாறும் என்பதற்கு இந்த பதிவு போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?
Friday, January 28, 2011
கர்ணமோட்சம் : இந்திய கனவும் நவீன-மகாபாரத கதையும்
முதல் கனவு
அமெரிக்க கனவை இந்தியர்கள் காப்பியடிப்பதற்கு முன்னர் உத்தமமான ஒரு இந்தியகனவை உருவாக்க ஒரு முயற்சி நடந்தது – 1899 வங்காளத்தில். புராணங்களில் மூழ்கிகிடக்கும் இந்தியர்களை எப்படி அறிவியல் சார்ந்த நவீனயுகத்திற்கு மாற்றுவது என்று யோசித்த விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ், ரபீந்தரநாத் தாகூருக்கு கர்ணனை ஹீரோவாக கொண்டு, மகாபாரதத்தை வேறு கோணத்தில் எழுதவேண்டி ஒரு கடிதம் எழுதினார். அதில் தேரோட்டியாக வாழவேண்டும் என்று தனக்கு விதிக்கப்பட்ட விதியை எதிர்த்து தெய்வங்களுடன் (மகாபாரதத்தின் ஒரிஜினல் ஹீரோக்கள் - கிருஷ்ணர், யுதிஸ்டர், அர்ஜுனன்) போராடும் மனித பாத்திரமே கர்ணன்.
சாதிக்கவேண்டும் என்ற வெறி, தனது சமூக அந்தஸ்தத்தை மீறிய கனவுகள், குடும்ப உறவுகளை தாண்டி தொழில்முறை உறவுகளே முக்கியம் என்ற எண்ணம், எல்லாவற்றிக்கும் மேலாக தன் தலையெழுத்தை தானே எழுத துணியும் துணிச்சல் போன்ற குணாதிசயங்கள் கொண்ட கர்ணனே நவீன பாரதத்தின் மிடில்கிளாஸ் மக்களின் ஆதர்ஷ ஹீரோ. இது புராண பாரம்பரியங்களையும் நவீனயுக எதார்த்தத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அருமையான கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்து தாகூர் கர்ணா-குந்தி-சம்பத் என்ற ஒரு குறுநாடகத்தை போருக்கு முன் கர்ணனும் குந்தியும் சந்திக்கும் சம்பவத்தை மட்டும் எழுதினார். தாகூர் இதை புதிய இந்திய கலாச்சார அடையாளங்களின் தொகுப்பின் பகுதியாக இதை அமைத்துக்கொண்டார்..
மகாபாரதத்தை ரீடெல் (Re-tell ) செய்யும் முயற்சி பலரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் படைப்பாளிகள் அந்தந்த காலகட்டத்தில் இருந்த இந்திய சமூகசூழலை அதில் பதிவு செய்கிறார்கள். இந்த மறுபதிப்புகளின் மூலம் பல மிடில்கிளாஸ் இந்தியர்கள் எல்லோரும் தங்களை கர்ணன் பாத்திரத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் தங்களை அர்ஜுனனாகவும் பாவித்துகொள்கிறார்கள்.
அர்ஜுனன் கோணம்:
அமிதாப் நடித்த தீவார் (தமிழில் ரஜினி நடித்த தீ), இந்த வரிசையில் ஒரு முக்கிய திரைப்படம். இதில் அமிதாப் கர்ணனின் சாயல் கொண்ட ஒரு கடத்தல்காரன் பாத்திரம். இவரை பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டராக, அவரது சகோதரன் (அர்ஜுனன் சாயலில்) பாத்திரத்தில் சசிகபூர். ஆனால் இப்படத்தில் கர்ணன் கெட்டவழியில் செல்லும் நல்லவனாகவும், இதை த்டுக்க முயலும் நல்லவன் அர்ஜுனனாக, அர்ஜுனனின் கோணத்தில் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது.
கர்ணன் கோணம்:
மகாபாரதம் கர்ணனின் கோண்த்திலும் பலமுறை படமாக்கப்ப்ட்டுள்ளது. Shyam Benegal-Girish Karnad, ”KalYug ” என்று ஒரு படம் எடுத்தார்கள். தமிழில் “பட்டாக்கத்தி பைரவன்” என்ற படத்தில் சிவாஜி மார்டர்ன் கர்ணனாக நடித்துள்ளார். பட்டாக்கத்தி பைரவனில் சிவாஜி செளகார்ஜானகியுடன் திரும்ணத்திற்குமுன் தவறுசெய்துவிட்டு பிறகு ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஜானகியோ குழந்தையை (இரணட்டாவது வேடத்தில் கர்ணன்-சிவாஜி) வேறுஇடத்தில் விட்டுட்விட்டு, மேஜரை கல்யாணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு பிறக்கும் ஜெய்கணேஷ்தான் அர்ஜுனன். இவர்களுக்குள் நடக்கும் மகாபாரதயுத்தம் தான் கதை.
இக்க்தையின் சாயல் மணிரத்னம் ரஜினியை கர்ணனாக/தாதாவாக வைத்து எடுத்த தளபதியில் பலமாகயிருக்கிறது.
நித்தமும் மகாபாரதம்: கலவை கோணம்
இன்றைய சமூகசூழலில் நாம் ந்ம்மைவிட மேல்தட்டில் இருப்பவர்களுடன் மோதும் போது கர்ணனாகவும், நமக்கு கீழ் இருப்பவர்களுடன் மோதும்போது அர்ஜுன்னாகவும் நட்ந்துகொள்கிறோம். ஆக இன்றைய மகாபாரத்தில், நாம் எல்லோரும் பாதி அர்ஜுனன் பாதி கர்ணன் கலந்த கலவைகள். மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறோம் என்று பாஸிடிவாக இருக்கும் தருணங்களில் (India Shining காலங்களில்) அர்ஜுனன் கோணத்திலும், மிடில் கிளாஸ் மக்கள் கஷ்டப்ப்டும்போது (India Struggling காலங்களில்) கர்ணன் கோணத்திலும் நவீன் மகாபாரதம் கதைகள் படமாக்கப்படுகின்றது.
மேற்கண்ட படங்கள் எதிலும் தன்னைபோல திறமையும் த்குதியும் உள்ள கர்ணனை அதிகாரத்தை சாதகமாக பயன்ப்டுத்திக்கொண்டு, தில்லுமுல்லு செய்து தோற்கடித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லாதவனாக, தனது தவறுகளை உணராதவனாக காட்டப்பட்டிருக்கிறான். ஆனால் தனது பாவங்களை உணர்ந்த ஒரு அர்ஜுனன், தவறான பாதையில் செல்லும் கர்ணனை த்டுக்க நினைத்தால்?
அப்படி ஒரு கெட்ட அர்ஜுனன் (நரேன்) கெட்ட கர்ணன் (அஜ்மல்) கோணம் தான் மிஷ்கினின் அஞ்சாதே.
Thursday, January 27, 2011
கதைகளும் கனவுகளும் – கமுக அறிக்கை
“The Great American Dream”, அமெரிக்க-கனவு என்பதே அமெரிக்க சமூகத்தின் அடித்தளம். ஒரு வீடு, ஒரு கார், காலத்திற்கு எற்ப உபகரணங்கள், குழந்தைகள், வசதியான வாழ்வு.. இந்த அமெரிக்க புத்தகங்கள், நாவல்கள், திரைப்படங்கள், விளம்பரபடங்கள் என்று அத்தணை கலாச்சார பொருட்களின் அடிநாதம் இந்த அமெரிக்க-கனவே..
அமெரிக்க-கனவை காப்பியடித்து இந்திய ஊடகங்கள் “ஒரு இந்திய-கனவு” என்ற க்ருத்தை முன்வைத்தார்கள். இந்த இந்திய-கனவு என்பது என்ன? இன்ஜினியரிங் படிக்கவேண்டும், அமெரிக்கா சென்று ஒரு MNCயில் வேலைக்கு செல்லவேண்டும். Green-Card வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும்.
இன்ஜினியரிங் படிக்காவிட்டால் எப்படியேனும் அரபு நாடுகளுக்கோ அல்லது சிங்கப்பூர்/ம்லேசியா போன்ற நாடுகளுக்கோ சென்று செட்டிலாக வேண்டும்..
இது போன்ற கனவுகள் எப்படி ஒரு இளம் மனதில் விதைக்கப்ப்டுகிறது? கதைகள் மூலமே. திரைப்படங்கள், விளம்பரப்ப்டங்கள் எல்லாவற்றிற்கும் கதைகளே ஆதாரம். இந்த கதைகள் ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன ஆகும்? இன்றைய இந்திய-கனவே ஒரு மிகப்பெரிய உதாரணம்.
இந்திய அரசாங்கமே இந்த கனவை நனவாக்குபவர்களை நம்பித்தான் இருக்கிறது. இந்த கனவை நனைவாக்குபவர்களுக்கு சாதகமாகத்தான் அனைத்து திட்டங்களும் சட்டங்களும் நிறைவேற்றப்ப்டுகின்றன. இந்திய கனவை துரத்தாதவர்கள், இந்தியாவிலேயே இருக்கவிரும்புபவர்கள், இந்தியாவிலேயே இருப்பர்கள எல்லோரும் பலிகடாக்கள் ஆக்கப்ப்டுகின்றனர்.
நல்ல கதைகள் நடக்காத, வாழ்க்கைக்கு உதவாத கனவுகள் என்று பலிக்கும் Practicalist களுக்கு தேவையில்லை. Idealists-களுக்கும், வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க நினைப்பவர்களுக்கும், மிகமிக குறிப்பாக கனவுகளோடு வாழும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகமிக தேவை. அதனால் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் மிகமிக தேவை.
நல்ல கதைகளை சொல்வோம், அடுத்த தலைமுறையையேனும் வெல்லச் செய்வோம்.
கதை உயர கனவு உயரும்
கதை உயர கனவு உயரும்
கனவு உயர எண்ணம் உயரும்
எண்ணம் உயர முயற்சி உயரும்
முயற்சி உயர வளம் உயரும்
வளம் உயர வாழ்வு உயரும்
வாழ்வு உயர கலைகள் உயரும்
கலைகள் உயர கலாச்சாரம் உயரும்
கலாச்சாரம் உயர சமூகம் உயரும்
இளைஞன் : கதைக்கட்சியின் (கதைக்கரு மட்டும்) விமர்சனம்
முன்னுரை : படத்தின் திரைக்கதை, கதை சம்பவங்கள் நடிகர்களின் நடிப்பு, படத்தின் மேக்கிங், படத்தின் அரசியல் பின்னணி பற்றிய எதுவும் கருத்தில் கொள்ளாமல் கதை பற்றி மட்டுமே இந்த விவாதம்,
இளைஞன் கதையின் பின்புலம் ஒரு கப்பல்கட்டும் தளம். கதையின் காலம், இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த சில வருடங்களுக்குப்பின். இந்தியாவிற்கு அரசியல் விடுதலை கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் சென்றபின்னரும் அவரது அல்லக்கை சுரண்டல் முதலாளிகள் கப்பல்கட்டும் தொழிலாளிகளின் உழைப்பை உறுஞ்சுவதை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை.
இந்த படத்தை பொருத்தவரை கதையின் களனான கப்பல்கட்டும் தொழில் ஒரு உருவகமே. இந்த படத்தின் காலத்தை நிகழ்காலமாகவும், கப்பல்கட்டும் தொழிலை சாப்ட்வேராகவும், இங்கிலாந்து என்பதிற்கு பதிலாக அமெரிக்காவுமாக மாற்றி யோசித்துப் பாருங்கள். போன நூற்றாண்டிற்கும் இன்றைய நிகழ்காலத்திற்கும் அதிகம் மாற்றமிலலை என்பது புலப்படும். இந்த உண்மைதான் இந்த கதையின் சிறப்பு. இக்க்தையில் கப்பல்கட்டுதல் என்பது ஒரு உருவகம் (Metaphor) தான். இதை நான் மட்டும் சொல்லவிலலை. இந்து நாளிதழும்கூட சொல்கிறது. இதற்கொரு சபாஷ்.
காட்டுப்பூச்சி, ராக்கெட் ராஜா என்றெல்லாம் கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் கொண்ட இந்த கால ஹீரோகளிடையே கார்க்கி என்று
பெயர்வைத்திருக்கிறார் இந்த கதையின் ஹீரோ. இத்ற்கொரு சபாஷ்.
கப்பல் கட்டுவதும் சாப்ட்வேர் உருவாக்குவதும் பலதரப்பட்ட மனிதர்கள் இணையும் ப்ரோஜட்கள். பல மாற்றுகருத்துக்கள் கொண்ட மனிதர்கள ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டும் ஒருவரொடு ஒருவர் இணைந்தும் செய்யும் கூட்டுமுயற்சி / போராட்டம். இதனை மையக்கருத்தாக கொண்ட திரைப்படம் த்மிழில் வந்ததாக எனக்கு நினைவில்லை. அதற்காக மேலும் ஒரு சபாஷ்போடலாம்.
பி.கு.: க்தையின் மற்ற கதாபாத்திரங்களை இன்றைய காலத்தில் ஏற்று நடிப்பவர்கள் யார் யார் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். சரியாக யூகிப்பவர்களுக்கு இந்த படத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் IRONY புரியும்.
Saturday, January 22, 2011
உலகின் மிகச்சிறிய சிறுகதை
Ernest Hemingway – நோபல்பரிசு பெற்ற ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். அவரிடம் ஒருவர் பந்தயம் ஒன்று கட்டினார். ஹெம்மிங்வேயால் உலகின் மிகச் சிறிய கதையை எழுதமுடியுமா என்பதே. ஆறே வார்த்தைகளில் ஒரு கதை எழுதி வெற்றி பெற்றார் ஹெம்மிங்வே. அந்த கதை இதோ:
"For sale: baby shoes, never worn."
என் தமிழாக்கம்:
“விற்பனைக்கு: பச்சிளங்குழந்தை காலணிகள். உபயோகப்படுத்தப்படாதது.”
எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லக்கேட்ட தமிழின் மிகச்சிறிய பாட்டிகதை:
ஒரு ஊரில் ஒரு நரி. அதோடு சரி.
இதே போல, உலகின் மிகச்சிறிய காதல் க(வி)தை – Gabriel Garcia Marquez எழுதிய க(வி)தையின் எனது தமிழாக்கம்:
தேடிக்கொண்டிருக்கிறேன் என் காதலியை. முதல் காதல்கதை படித்த நாள்முதலாய்.
Friday, January 21, 2011
தமிழ்படம் பார்ட்-2 : ஒரு தழுவல் ஸ்கிர்ப்ட்
ஓப்பனிங்: ஹீரோ ஒரு நடிகர். சென்னையில் இருந்து கிளம்பி சென்னைக்கே வருகிறார். அப்பா குடுத்த துட்டில், நண்பர்களோடு சேர்ந்து ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் எடுக்கிறார். படம் புட்டுக்குகிறது. Shock.
ஸீன் ஒன்று:
சலைக்கமறுக்கிறார் நடிகர். தத்துபித்தென்று அன்றைய நட்சத்திரநடிகர்களை காப்பியடித்து நடிக்கமுயன்று தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி. (ஓரு இன்ஸ்பிரேஷன் சாங்..- தோழா.. வானம்தூரமில்லை.. தோழா, வாழ்ந்து பார்ப்போம் வாடா.. (போல))
ஸீன் இரண்டு: ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டரை எதேட்சையாக சந்திக்கிறார். நீ தாண்டா ஹீரோ. ப்ரோடியூசர் கூட ரெடி.!!! .. என்கிறார். (வெண்ணிறாடை தேவதைகள் பேக்கிரொண்டில் ஒரு நூறு பேர்கள் ஓடுகிறார்கள். ஒரு ரீமிக்ஸ் சாங்.)
டைரக்டர் சொல்படி கேட்டு மிகுந்த சிரத்தையுடன் நடிக்கிறார் டூப்பே போடாமல் சண்டைபோடுகிறார். படம் வெற்றியடைந்ததும், மற்ற டைரக்டர்கள் மொய்க்க, ஒழுங்காக சிரத்தையுடன் கதைகளைக் கேட்டு, பலரது ஆலோசனைகளையும் கேட்டு, கதைகளை தேர்வுசெய்து தொடர்ந்து இரவுபகல் பார்க்காமல் நடிக்கிறார். அதில் சில படங்கள் ஓடுகிறது, சிலது இயக்குனர்கள் சொதப்புவதால் ஓடாமல் போகிறது. சந்தை மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடுகிறது. (விறுவிறுப்பான மாண்டேஜ் – அண்ணாமலையில் ரஜினி முன்னேறுவது போல)
ஒரு நடிகை தொடர்ந்து நடிகருடன் மூன்று படங்களில் நடிக்கிறார்.. (ஒரு நல்ல குத்துபாட்டு சாங்)
ஸீன் மூன்று: மற்ற தென்மாநிலங்களில் ஓடிய படத்தின் கதையை த்ழுவி ஒரு மாஸ் ஆக்ஷன் படத்திற்கான கதையை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க ஒரு டைரக்டர் (ஏற்கனவே பலரிடம் க்தை சொல்லி ரிஜக்ட் செய்யப்பட்டவர்) முன்வருவார்கள். அடுத்தலெவல் போக அருமையான் வாய்ப்பு என்று உடனிருப்போர்களும் ஆமேதிக்க, ஒரு புதிய ஆக்ஷன்ஹீரோவாக அவதரிக்கிறார் நம்து நடிகர்.
ரிலீஸ் தேதி..(திக்..திக்..திக்..- டென்ஷன்)
பலத்த ஓசையுடன் ஹை பிட்சில் ஒரு கரகோஷம்.. ஒரு விடலை ஓடிவருகிறான்..- “படம் சூப்பர்ஹிட்..”
ஒரு புதிய தளபதி பட்டம். தெருவெல்லாம் பேனர்கள்.. தமிழகம் எங்கிலும் விடலைகள் நடிகருக்கு ரசிகர்மன்றம் வைக்கிறார்கள்.
(நாலைந்து வெள்ளைகாரிகள் துரத்தியும், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஒரு மலையாள ஹீரோயினுடன் ஒரு டூயட் சாங்)
ஸீன் நான்கு: ஒரு (Undercover Action Sequence) படம் ஹிட்டானதால் மேலும் பல தழுவல்படங்கள் உருவாகுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்ச் டைலாக்குகளும, போஸ்களும், ஹிரோயின்கள் இரண்டு, மூன்று என்று எகிருகிறது(சம்பளத்தைப்போல).
முருகன், விநாயகன், சிவன், மகாவிஷ்ணு போன்ற தெயவங்களின் வழித்தோன்றல் நமது நடிகரே என்பதை விளக்கி பல கவிஞர்கள் பாடல்கள் எழுதுவார்கள்.
(கந்தா.. கடம்பா.. சிங்காரவேலா சாங்கையும், காக்க காக்க கடவுளடா சாங்கையும் மிக்ஸ் செய்து ஒரு க்ரூப் சாங்)
ஸீன் ஐந்து : புதிதாக வந்த ஒரு வடநாட்டு நடிகையுடன் நெருக்கம் என்று கிசுகிசு நியூஸ்பேப்பரில் வருகிறது. அதைபார்த்த முதல் ஹீரோயின் ஷாக் ஆகிறார். நடிகரிடம் வந்து ஆவேசமாக சண்டைபோடுகிறார்.. அப்போது நடிகர் தனது படங்களை ஓடவைக்க தான் செய்த UnderCover Operation தான் இது என்று விளக்குகிறார். ( உயிரின் உயிரே, உயிரின் உயிரே. நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.. – டூயட் சாங்) சாங் முடியம்போது திடீரென நடிகர் அப்பா பார்த்துவிடுகிறார்.. (Shock)
நடிகைபோனதும், “அப்பா, இப்ப ஏன் டென்ஷனாகரீங்க.. undercover operation கிசுகிசு மட்டும் இல்லை.. இப்ப இந்த நடிகைகிட்ட பேசினதும் undercover operation தான்.. புரியாதா.. அப்பாவிற்கு மீண்டும் Shock…
ஸீன் ஆறு: நடிகரே இப்போது மற்ற மொழிகளில் என்ன படம் ஓடுகிறது என்பதை கவனித்து தன் கதை ஞானத்தை வளர்த்துக்கொள்கிறார். இதற்குபிறகு தனது ரேன்ச்சிற்கு எந்த கதை சரிப்படும் என்பதை நிர்ணயம்செய்யும் திறமை வளர்ந்துவிடுகிறது
நடிகர் கார் வெள்ளை மாருதியிலிருந்து கிராகிக்ஸில் மாறி ஒரு டொயோட்டா லான்சர் ஆகிறது.. பிறகு மீண்டும் மாறி ஒரு பென்ஸாகிறது.. பிறகு மீண்டும் மாறி ஆடி காராகிறது.
அப்போது ஒரு பீச் பங்களா.. நடிகனுடைய சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடிபேசுகிறார்கள்.
பிசினஸ்மேன் – ஏய்.. இந்த நடிகன் என் சேனலிலேயே ஆடிட்டு, என்னை முந்திக்கிட்டு எனக்குமுன்னாடியே ஆடி கார் வாங்கிட்டான்.. த்மிழ்நாட்டில எதிலையுமே நான் தான் நம்பர் ஒன்னா இருக்கனும்.. அதுனால அவன ஒழிச்சே ஆகனும்..
தாதா – தலைவரே.. அவன பேசாம போட்டிரவா..”
அரசியல்வாதி – நான் ஒரு சாணக்கியன்.. பத்துவருஷங்களிச்சு என்ன நட்க்கும்கிறதகூட என்னால கணிக்கமுடியும்.. இந்த பொடியனால தான் எனக்கு.. சேனலிலிருந்தே இவன ஓரங்கட்டு”
பிசினஸ்மேன் குடித்துகொண்டிருந்த வொய்ன்கிளாஸை வீசி டீவி ஸ்க்ரீனை உடைக்கிறான்.
இடைவேளை...
ஸீன் ஏழு: நடிகரின் பங்களாவின் ஸ்விம்மிங் பூல். இரவு.
காமெடி பீஸ் - ”நீ ஜெய்ச்சுடடா மச்சான்”
நடிகர் – “இருந்தாலும் என்னமோ ஓன்னு குறையுதேடா மச்சான்”
என்று சொல்லும் தருவாயில், அவருக்கென்றே ஒரு கதையை (சொந்தமாகவா இல்லை ஏதோஒரு ஆங்கில படத்தை த்ழுவியா என்று தெரியவில்லை) உருவாக்கி, சமீபத்தில் ஹிட் கொடுத்து, டிரெண்டில் இருக்கும், வளர்ந்துவரும் ஒரு இளம் டைரக்டர் கதை சொல்லவருகிறார்.
டைரக்டர் - “ஓப்பன் பண்ணினா...” கட்.
படம் பிளாட்டின் ஜூப்பிளி..
இப்படம் வெற்றிபெற்றதும் நடிகரின் ஆதர்ஷ வேற்றுமொழி ஹீரோ இவரது படத்தை தழுவி அவர் படம் எடுப்பார். நமது நடிகர் அந்த மாநிலத்திற்கு சென்று பல விழாக்களில் பங்கேற்று அகில இந்திய நட்சத்திரமாக உயர்வார். பல பல்கலைகழகங்கள் இவரை போற்றி டாக்டர் பட்டங்களை வாழ்த்திவழங்குகிறார்கள்
அதே பீச் பங்களா.. இப்போது நடிகனுடைய லேட்டஸ்ட் சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடியிருக்கிறார்கள்.
அரசியல்வாதி – “என்னமோ சேனல் இருந்தே தூக்கிடுவேன்னு சொன்ன.. என்ன ஆச்சு..இப்பவும் ஹிட்மேல ஹிட்..”
பிசினஸ்மேன் – “இன்னைக்கு யூத்தெல்லாமே இவன்பக்க தான் இருக்காங்க.. இவன கட்பண்ணினா சேனலே படுத்திரும்போல இருக்கே..”
பிசினஸ்மேன் தாதாவை பார்த்து கத்துகிறார்– “தூக்றா அவன..”
தாதா ”யெஸ் பாஸ்.” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் டீவியை அப்படியே அள்ளிக்கொண்டு வெளியே போகிறார்.
Fade Out. Fade in.
ஸீன் எட்டு: சில வருடங்கள் ஆன பின் திரையுலகில் டிரேண்ட்கள் மாறுகிறது, டெக்னாலஜிகள் மாறுகிறது, கதை சொல்லும் யுக்திகள் மாறுகிறது. பல புதிய தளபதிகள் கிளம்பு வருகிறார்கள். ஆனால் கொஞ்சம்கூட மாறவேமாறாமல், சற்றும் சலைக்காமல் இவற்றையெல்லாம் நடிகர் சமாளிக்கிறார், தனது ரசிகர் பரிவாரங்களுடன்.
ஆனால் ரசிகர்களுக்கு வயதாகவயதாக, ஜுனியர் தளபதிகளின் புதிய கவர்ச்சியால் நடிகர்க்கு ஒரு சில சரிவுகள் எற்படுகிறது. ஆனால் நடிகர் அசர மறுக்கிறார். பஞ்ச் டைலாக்குகள் போதவில்லை.. மேலும் சில படங்கள் ஊத்திக்கொள்கிறது.
அதே பீச் பங்களா.. லேட்டஸ்ட் சாங் டீவியல் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஆனால் அது நமது ஹீரோவுடையதில்லை. வேறு ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகருடையது.. ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு அரசியல்வாதி, ஒரு தாதா கூடியிருக்கிறார்கள். ஆனால் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிசினஸ்மேன் – “ எப்புடி. ஜெய்ச்சுடோம்ல.. எப்போதுமே நாமதான் நம்பர் ஒன்.
தாதா – “ எப்புடி பாஸ் மக்கள் இவன்யெல்லாம் ஹீரோவா ஏத்துக்கிறாங்க?
அரசியல்வாதி – “அதெல்லாம் உனக்கு புரியாது. விட்டுரு.”
பிசினஸ்மேன் சிரிக்கிறார். “சாங் சரியா கேட்கலையே.. கொஞ்சம் சத்தாமா வை..”
தாதா டீவி வால்யூமை கூட்டுகிறான். எல்லோரும் நக்கலாக சிரிக்கிறார்கள்.
ஸீன் ஓன்பது:
நடிகர் – “எவண்டா இவன்.. நம்ம படம் ரிலீஸ் பண்ணறப்போயெல்லாம் இவனும் ரிலீஸ் பண்றான்..எப்பிடி? இதுக்கு காரணமான அரசியல் ச்தியை எப்படி ஒரேஒரு பிர்லியண்ட் ஸீன்ல ஒடைக்கிறேன்.. பாரு.. கூப்பிடு பிரஸ்ஸை”
நடிகர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.
”எனக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியை விரைவில் அரசியலுக்கு வந்து எதிரிகளின் ஆட்டத்தை, என் படத்தில் வரும் வில்லன்களை அடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட வேகமாக அடித்து வீழ்த்துவேன்”
ஒரு தனி ஜெட்டில் ஏறி டெல்லியில் யாரோ ஒரு மர்மமான நபரை நடிகர் சந்திக்கிறார்.
ஜுனியர்விகடன்களும் நக்கீரன் சூடாகப்பேட்டிகளும் சர்வேக்களையம், வருவாரா மாட்டாரா என்ற யுகங்களையும் “வருவார் ஆனால் வரமாட்டார்” என்ற ரீதியில் கட்டுரைஎழுதி ஊரல்லாம் நடிகரைப்ப்ற்றி பரபரப்பாக்குகிறார்கள். சந்தடிசாக்கில அவர்களும் காசுபார்க்கிறார்கள். (”அந்த வானத்தப்போல திறமை படைத்த வல்லவரே” – சாங் )
ஸீன் பத்து: ”எல்லோருமே டூப்பு நான் தாண்டா டாப்பு” என்று சொல்லி இதற்கு பின் தனது படங்களில் கதை மட்டுமல்ல வசனங்களையும் (மாறிவரும் அரசியல் பின்னனிக்கேற்ப்ப) நடிகரே எழுத ஆரம்பிக்கிறார். ப்ராக்ஸியாக செய்துகொண்டிருந்த டைரக்சன் பணியை வெளிப்படையாக செய்கிறார். ரசிகர்கள் ரிலீஸ் நாளிலேயே ஸில்வர் ஜூப்ளி கொண்டாடுகிறார்கள்.
(நடுநிலையான) ஊடகங்கள் சிலது ஆதரித்தும், எதிரிகளின் ஜால்ரா ஊடகங்கள் நக்கல்செய்தும் எழுதுகிறார்கள். ”இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன உனக்கென்ன்..” என்று தொடங்கும் பாடலுக்கு அர்த்தம், டெல்லியல் கூட்டணி அமைத்து தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருப்போகிறேன் என்பதே என்று ஒரு அரசியல் ஆலோசகர் NDTV யிற்கு பேட்டி கொடுக்கிறார்.
பொதுமக்களோ குழம்பிப்போய் உண்மையை நேரடியாக தாங்களே கண்டுபிடிக்கிரேன் பேர்வழி என்று சொந்தக்காசை செலவளித்து தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள். ஆனந்தவிகடனில் “
தமிழ்படம் பார்ட்-2:ஒரு நடிகர் டைரக்டராகிறார்” என்று ஏன் டைட்டில் வைத்துயிருக்கிறார்கள் என்று கேள்வியும் கேட்டு, படத்திற்கு 60 மார்க் கொடுக்கிறார்கள்.
தமிழ்படம் பார்ட்-2:ஒரு நடிகர் டைரக்டராகிறார்” என்று ஏன் டைட்டில் வைத்துயிருக்கிறார்கள் என்று கேள்வியும் கேட்டு, படத்திற்கு 60 மார்க் கொடுக்கிறார்கள்.
Cut.
பிசினஸ்மேன் – “டெல்லிக்கு போகிற எல்லா பிளைட்டும் நம்மளோடது. அப்படி இருக்கும்போது இவன் எப்பிடிடா டெல்லிக்கு போனான்? எப்பிடிடா எப்பிடி...”
அரசியல்வாதியும் தாதாவும் முழிக்கிறார்கள்.
Cut.
நடிகன் – “லோக்கல் சேனல்ல போடாட்டியென்ன.. நெஷனல் சேனல்ல வ்ருவோம்ல”
எப்போதும் போல் படங்களில் வருவதுபோல நடிகருக்கு சுபம் தான்.
End.
End.
இதுதான் ஒரு நடிகர் டைரக்டராகும் ஸ்கிர்ப்ட. பாஸ், இந்த கதை பல தலைமுறைகளாக ஹிட்டாகிகொண்டிருக்கும் கதை. Evergreen formula.
பி.கு. :
இந்த படம் குஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த படம் ஒரு ஹைதர்கால கதையின் காப்பி என்று நெட்டில் பதிவர்கள் கிழிகிழியென்று கிழித்தார்கள். ஆனால். சாரி பாஸ். நம்ம நடிகரும் சரி விடலைபசங்களும் சரி இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஆனந்தவிகடனே இந்த படத்திற்கு 60 மார்க் கொடுத்திருக்கான்.. கொய்யால்லே எவண்டா இந்த வலைபதிவர்கள்? என்றதாக கேள்வி.
இந்த படம் குஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த படம் ஒரு ஹைதர்கால கதையின் காப்பி என்று நெட்டில் பதிவர்கள் கிழிகிழியென்று கிழித்தார்கள். ஆனால். சாரி பாஸ். நம்ம நடிகரும் சரி விடலைபசங்களும் சரி இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஆனந்தவிகடனே இந்த படத்திற்கு 60 மார்க் கொடுத்திருக்கான்.. கொய்யால்லே எவண்டா இந்த வலைபதிவர்கள்? என்றதாக கேள்வி.
Thursday, January 20, 2011
தமிழ்திரையுலகின் தழுவல்கலாச்சாரம்
எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் முடிந்தபின் ரஜினி-கமல் காலம் 1980-களில் இருந்து இன்றுவரை நீடிக்கிறது. இவர்களின் சக்ஸஸ் பார்மூலாவைத்தான் விஜய்,அஜித் போன்றவர்கள் பாலோ செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு வலைதளத்தில் ரஜினி-கமல் பட கதைகளின் மூலம் பற்றி போட்டிருந்ததை பார்த்தேன். அந்த பட்டியல் இதோ..
Rajini Remakes
1.Moondru Mudichu- O Seetha Katha (Te)
2.Kuppathu Raja-Do Yaar (Hi)
3.Naan Vazavaipen-Majboor (Hi)
4.Billa-Don (Hi)
5.Natchathiram-Sivaranjani (Te)
6.Polladavan-Premade Kanike (Ka)
7.Thee-Deewar (Hi)
8.Thillu Mullu-Gol Maal (Hi)
9.Pokiri Raja-Chuttalunaru Jagratha (Te)
10.Pudhukavithai-Na Nina Mariyalare (Ka)
11.Adutha Varisu-Raja Rani (Hi)
12.Naan Mahan Alla-Viswanath (Hi)
13.Nallavanuku Nallavan-Dharmathmudu (Te)
14.Naan Sigapu Manithan-Aaj Ki Awaz (Hi)
15.Kai Kodukkum Kai-Katha Sangama (Ka)
16.Pathikathavan-Kuddhar (Hi)
17.Viduthalai-Qurbani (Hi)
18.Maaveeran-Mard (Hi)
19.Mr. Bharath-Trishul (Hi)
20.Naan Adimai Illai-Pyar Jhuktha Nahin (Hi)
21.Velaikaran-Namak Halal (Hi)
22.Guru Sishyan-Insaf Ki Pukar (Hi)
23.Dharmathin Thalivan-Kasme Vaade (Hi)
24.Siva-Khoon Pasina (Hi)
25.Maapillai-Athaki Yamudu Ammayiki Mogudu (Te)
26.Panakaran-Laawaris (Hi)
27.Adisaya Piravi-Yamudiki Mogudu (Te)
28.Dharmadhurai-Deva (Ka)
29.Mannan-Anuraga Aralidhu (Ka)
30.Annamalai-Kudh Karz (Hi)
31.Pandiyan-Bombay Dada (Ka)
32.Veera-Allari Mogudu (Te)
33.Baasha-Hum (Hi)
34.Muthu-Thenmavin Kombath (Ma)
35.Chandramukhi-Manichitrathazhu (Ma)
36.Arunachalam-Malamaal (Hi)
37.Thambikku Endha Ooru-A chiranjeevi film remake (Te)
38.Aarilirundhi Aruvadhu Varai-Remake of A Shobhan Babu Film (Te)
39.Kuselan-Katha Parayumbol (Ma)
Kamal Remakes
Avvai Shanmugi - Mrs Doubtfire
Panchathantiram - Very Bad Things
Nammavar - The Class of 1984
Virumandi - Life of David Gale
Pammal K Sambandam - The Bachelor
Vettri Vizha - Bourne Identity
Sathileelavathi - She Devil
Soora Samharam - Witness
Indian - Falling Down
இதில் என்ன பெரிய சங்கதி? இவ்விருவரின் படங்கள் 100% காப்பிகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் தழுவல்கள் தான். ஒன்றோ அல்லது இரண்டோ தழுவலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், இன்று விஜய் முதல் ஜெயம் ரவி வரை எல்லோரும் பெரும்பாலும் இதுமாதிரி தழுவல் படங்களில் தான் நடிக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் ஓரிஜினல் கதைகளுக்கு உரிய மரியாதை குறைகிறது. அதோடு தனித்துவம் வெளிபடுத்தும் இயக்குனர்கள் பெரும்பாலும் புதிய, அனுபவமில்லாத, நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களுடனேயே படம் எடுக்கவேண்டிய கட்டாயம். இயக்குனர்களுக்கான் ஸ்கோப் மிகவும் குறுகலாக ஆகிவிட்டது. ஒரு படம் தோற்றாலே இயக்குனருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திரையலக தயாரிப்பார்கள், பிளாப் மேல் பிளாப் கொடுக்கும் நடிகர்களையும் தாங்குகிறார்கள், இதுதான் கொடுமை.
தழுவல் படங்களில் இயக்குனர்களின் பங்களிப்பு மிகமிக கம்மியே (கொஞ்சம் ஆங்காங்கு திறைமை காட்டலாம்தான்..). இம்மாதிரி வரும் தழுவல் படங்களில் நடிகர்களின் பெர்பாமன்ஸே பிரதானமாகிறது. நடிகர்கள் இப்படங்களை தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. நடிகர்கள் கொஞ்சம் வளர்ந்தபின் ஒரிஜினல் கதைகளையும்கூட தங்கள் இமேஜ்ஜிற்கு தகுந்தவாறு மாற்றச்சொல்கிறார்கள். இப்படியே போகப்போக இயக்குனர்கள் டம்மீபீஸ் ஆகிறார்கள்.
நட்சத்திர நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே வியாபாரம் என்று இருக்கும் சூழலில், சொந்தமாகவோ அல்லது காப்பியடித்தோ கதை, திரைக்கதை எழுதி நடிகர்களை இம்பிரஸ் செய்து இயக்குனர்களாகி விடலாம் என்று கனவு காணும் உதவி இயக்குனர்களின் கதி? இதில் காமெடி என்னவென்றால், பெரும்பாலான உதவிடைரக்டர்கள் சொந்த ஊர்களில் இருந்து வாழ்க்கையையே பணயம் வைத்து சினிமாவிற்கு வருவதற்கான இன்ஸ்பிரேஷன் இதே நடிகர்கள்தான்.
ஓகே. இதையும் தாண்டி ஒரிஜினல் கதைகளுடன் இயக்குனர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பங்களிப்பில் வளரும் நடிகர்கள் நட்சத்திரங்களான உடன் இதே இயக்குனர்களுக்கு (நட்சத்திர நடிகர்கள் நடிக்காமல் எடுக்கப்ப்டும் படங்களுக்கு) போட்டியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இதனால் தான் என்னவோ இப்போதெல்லாம் இயக்குனர்களே நடிகர்களாகிவிட்டனர்.
திரைப்படங்கள் தான் இன்றைய சந்தைசார்ந்த கலாச்சாரத்தில் மிகப்பிரதானமான படைப்புக்கள். ஒரு நாவல் படம் ஆனால், ஒரு எழுத்தாளர் இன்ஸ்டண்ட் பிரபலம் ஆகும் காலமிது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு தழுவல் படம் எடுக்கப்படும்பொழுதும் ஒரு எழுத்தாளனின் (அல்லது எழுதி-இயக்குபவரின்) வாய்ப்பு பறிபோகிறது என்று தானே அர்த்தம்.
தழுவல் படங்களே கூடாது என்று சொல்லவரவில்லை. தழுவல் படங்களை மட்டுமே செய்வதை தான் தவறு என்கிறேன். தழுவல் படங்களில் நடித்தே தன் நட்சத்திர அந்தஸ்த்தை தக்கவைத்து கொள்வது “Same Side Goal” போட்டே சாதனை செய்ததாக நினைத்துக்கொள்வதற்கு சமம்.
ஒரு படங்களின் வெற்றிதோல்வியை நிர்ணயம் செய்வதில் இணையத்தின் பங்கு வளர்ந்துவரும் இந்த சமயத்தில், வலைப்பதிவர்கள் காப்பியடித்து படம் எடுப்பவர்களை (இந்த படங்களிலாவது துளியேனும் கதையிருக்கும்) கண்டிப்பதைவிட தழுவல் படம் எடுப்பவர்களை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்பது என் வாதம்.
Tuesday, January 18, 2011
தமிழ் சினிமா ரசிகர் கட்சிகள்
பொங்கல் விடுமுறைக்கு சென்னையிலிருந்து பழனிக்கு பஸ்ஸில் சென்றேன். அப்போது “நாடோடிகள்” படம் போட்டார்கள். நாடோடிகள் ஒரு நல்ல யதார்த்தம் சார்ந்த படம். பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் கதையை இதில் வேறு கோணத்தில் ரீ-டெல் பண்ணியருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவின் காதலுக்கு உதவும் நண்பர்கள் தான் இதில் ஹிரோக்கள். இன்றைய சமூகசூழலில் இப்படத்தில் வரும் நண்பர்களைப் போன்றவர்களே ஹீரோக்கள் என்று சொல்லி, Out-of-the-World Heroism படங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ரசிகர்களை கவரமுயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளது.
இதே அலைகள் ஓய்வதில்லை படத்தை தெலுங்கில் பாதி ஆக்ஷன் பாதி காதல் படமாக உல்டா செய்தார்கள். அதை தமிழில் “ஜெயம்” ஆக ரீமேக் செய்தார்கள். ஆனால் ஜெயம் படத்திற்க்கும் நாடோடிகள் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?
உலகெங்கிலும் திரைப்பட ரசிகர்கள் கதை சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் ஹீரோயிஷம் சார்ந்த படங்களை ரசிக்கும் கட்சியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். தமிழில் பெரும்பாலும் ஹீரோயிஷம் சார்ந்த கட்சியே ஆட்சியில் இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு இடைக்கால ஆட்சியாக கதைசார்ந்த படங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாடோடிகள் படம் அப்படி ஒரு இடைக்கால ஆட்சியில் வந்த படம்.
ஆமாம், நீங்கள் இதில் எந்த கட்சி?
Friday, January 14, 2011
காப்பியும் ரீமேக்கும்
ஒரு பாடல் ஆகட்டும், ஒரு படம் ஆகட்டும் அல்லது ஒரு புத்தகம் ஆகட்டும் – எந்த ஒரு கலைபடைப்பையும் யாரும் எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் படைக்கமுடியாது. தனக்கு முன் வந்த படைப்பாளிகளின் படைப்புகளில் தனக்கு பிடித்த சிந்தனைகளுடன் தனது சிந்தனைகளையும் சேர்த்தும், ஆனால் அவர்களின் தாக்கம் வெளிப்படாமல் மறைத்தும் படைப்பது ஒரு முன்னுக்குபின் முரண்பாடான செயல். இதை படைப்பாளியின் அவஸ்த்தை (anxiety of influence) என்கிறார் ஹரால்டு புளூம் (Harold Bloom).
ஆனால் காப்பியடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என்று சொல்லிவிட்டு தைரியமாக காப்பிஅடிப்பவர்களும் உண்டு. தனது படைப்பின் தாக்கத்தை ரசிகனிடமே வெளிபடுத்தும் வகையில் ஒரு படைப்பை அமைத்துவிட்டு, ஆனால் அதிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்துவது தான் ரீமிக்ஸ் (remix). இசைக்கு ரீமிக்ஸ் போல் திரைபடத்திற்கு ரீமேக் (Remake). நான் குறிப்பிடும் ரீமேக் , தமிழிலேயே வந்த திரைப்படத்தை திரும்பவும் எடுப்பது.
பில்லா மற்றும் நான் அவன் இல்லை போன்ற படங்களின் டைரக்டர்கள் எல்லோர்க்கும் தெரிந்த கதையை திரும்பவும் எடுத்தாலும் அதில் தங்களது தனித்துவததை காட்ட தவறவில்லை. ஆனால் பாலைவனச்சோலை படம் தோற்றதும் இந்த டிரண்ட் நின்றுவிட்டது.
Thursday, January 13, 2011
காப்பியும் இன்ஸ்பிரேஷனும்
Amores perros என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஆனால் மணிரத்னம் காப்பியடித்துவிட்டார் என்று யாரும் குற்றம்சாட்டவில்லை. ஆனாலும் Amores perros தான் ஆயுத-எழுத்தின் இன்ஸ்பிரேஷன் என்று ஆயுத-எழுத்தின் விக்கீப்பீடியா பதிவே சொல்கிறது.
சிம்புவின் “வானம்”, தெலுங்கில் வந்த “வேதம்” படத்தின் ரீமேக். இந்த வேதம் படத்திலும் Amores perros உடைய தாக்கம் உள்ளது. அதே போல தனுஷின் ஆடுகளம் படத்திலும் Amores perros உடைய தாக்கம் உள்ளது என்று அதன் இயக்குனர் வெற்றிமாறனே ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டுள்ளார். ஆக Amores perros படத்தின் தாக்கம் பல தமிழ்படங்களில் உள்ளது.
இந்த Amores perros படத்தின் இன்ஸ்பிரேஷன் எது?
F. Scott Fitzgerald என்ற நாவலாசிரியரின் 1925இல் வெளிவந்த Great Gatsby என்ற ஒரு ஆங்கில நாவல். Great Gatsby நாவலில் ஒரு கார்விபத்து அந்த நாவலின் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத பல கதாபாத்திரங்களின் வாழ்வை புரட்டிபோட்டுவிடுகிறது. இந்த ஒரு கதைமுடிச்சை மட்டும் எடுத்துகொண்டு Alejandro González Iñárritu தனது Amores perros படைத்தார். வானம் படத்தில் கார் விபத்திற்கு பதிலாக ஒரு தீவிரவாத சதி திட்டம். ஆடுகளத்தின் களனான சேவல் சண்டை
Amores perros படத்தில் வரும் நாய் சண்டையை ஒத்து உள்ளது.
ஆக ஒரு படத்தின் plot யை எடுத்துக்கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். அதே போல் ஒரு படத்தில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதுவும் இன்ஸ்பிரேஷனே. ஆனால் plot உடன் சம்பவங்களையும் எடுத்துக்கொண்டால் அது காப்பி. சமீபத்தில் வந்த நந்தலாலாவும் யோகியும் காப்பியடித்த படங்கள் என்பது இதனாலேயே.
இன்னொரு படத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆகாமல் ஒரு நாவலை படித்து இன்ஸ்பியர் ஆகி ஒரு நல்ல படத்தை கொடுத்தால் அந்த இயக்குனரை ஒரு தரமான படைப்பாளியாக் உலகமே ஏற்றுக்கொள்கிறது என்பதை ஏனோ நமது இயக்குனர்கள் உணர்வதேயில்லை என்பது வருத்ததிற்கு உரியது.
Labels:
aadukalam,
aayutha ezuththu,
amores perros,
cinema,
vaanam
Wednesday, January 12, 2011
காப்பியடிப்பது நல்லது !
தமிழ் திரை உலகின் மேல் பதிவாளர்களின் பொதுவான ஒரு குற்றச்சாட்டு என்னவேன்றால் திரை உலகினர்கள் மேலைநாட்டு கதைகளை திருடுகிறார்கள் என்பதே. ஆனால் இந்த கதைதிருட்டை ஏன் எப்போதும் தவறானது என்று சொல்கிறார்கள்? உலக இலக்கியங்களை தமிழிற்க்கு கொண்டுவருவது எப்படி தவறாகும்?
Franz Kafka வின் Metamorphosis ஒரு மிக சிறந்த இலக்கிய படைப்பு என்று யாரும் ம்றுக்க முடியமா? இந்த கதையை தான் தமிழில் சமீபத்தில் அஜித்தை வைத்து எடுத்தார்கள். ஆனால் அதை ஏனோ இலக்கிய வட்டமும் பதிவர்களும் பெரிதாக கொண்டாடவில்லை.
Franz Kafka வின் Metamorphosis யில் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து ஒரு நாள் விழித்துப் பாத்தால் ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அதனால் அவன் படும் கஷ்டங்களையே அக்கதை விவரிக்கிறது. இந்த கதையை கொஞ்சம் மாற்றி Ferdydurke என்ற ஒரு நாவலை Witold Gombrowicz, என்ற போலந்து நாட்டு எழுத்தாளர் 1937.ல் எழுதினார். இதில் ஒரு 30 வயது இளைஞன் திடீரென ஒரு டீனேஜ் வயதினன் ஆகி ஸ்கூலில் சேர்க்கப்ப்டுகிறான். அங்கு அவன் மத்த பசங்களிடம் மாட்டிக்கொண்டு படும் வேதனை தான் அதன் கதை.
இந்த கதையை ஹாலிவுட்காரர்கள் “Never Been Kissed” என்று Drew Barrymore என்னும் நடிகையை வைத்து ஒரு மசாலா படமாக எடுத்தார்கள். இதில் ஒரு பெண்கள் பத்திரிக்கை நிருபரை, அண்டர்கவர் ஆப்பரேஷ்னாக ஒரு ஹை ஸ்கூலிற்கு அனுப்பி, அவ்வயது யுவதிகளின் எண்ணங்களை பற்றி எழுத பணிக்கிறார்கள். அந்த நிருபர் படும் வேதனைகளும் சோதனைகளும் தான் கதை.
இந்த கதையை ஹாலிவுட்காரர்கள் “Never Been Kissed” என்று Drew Barrymore என்னும் நடிகையை வைத்து ஒரு மசாலா படமாக எடுத்தார்கள். இதில் ஒரு பெண்கள் பத்திரிக்கை நிருபரை, அண்டர்கவர் ஆப்பரேஷ்னாக ஒரு ஹை ஸ்கூலிற்கு அனுப்பி, அவ்வயது யுவதிகளின் எண்ணங்களை பற்றி எழுத பணிக்கிறார்கள். அந்த நிருபர் படும் வேதனைகளும் சோதனைகளும் தான் கதை.
இந்த கதையை ஹிரோயிஷம் கதையாக மாற்றி ஷாருக்கானை வைத்து ஹிந்தியில “மேன் ஹுன்னா” என்று ஹிந்தில் எடுத்தார்கள். இதில் ஒரு ஆர்மிமேனாக வரும் ஷாருக்கை ஒரு மாணவனாக காலேஜிற்கு அனுப்பிகிறார்கள். அங்கே ஷாருக் எப்படி அவரது தங்கையையும் மற்றவர்களையும் சமாளிக்கிறார் என்பதே அதன் கதை. இந்த கதையைத்தான் “ஏகன்” என்று அஜித் நடித்தார். மொத்தத்தில் “ஏகன்” “metamorphosis” தானே.. சுற்றிவளைத்து பார்த்தால் ஒரு உலக இலக்கியத்தை தமிழிற்கு கொண்டுவந்த பெருமை அஜித்திற்கு உள்ளது என்பதை யாரேனும் மறுக்கமுடியாமா?
Subscribe to:
Posts (Atom)