Saturday, January 29, 2011

The Incredibles - இந்திய கனவும் ராமாயண கதையும்





“The Great American Dream”, அமெரிக்க-கனவு என்பதே அமெரிக்க சமூகத்தின் அடித்தளம். ஒரு வீடு, ஒரு கார், காலத்திற்கு எற்ப உபகரணங்கள், இரு குழந்தைகள், வசதியான வாழ்வு etc.... இதுவே அமெரிக்க புத்தகங்கள், நாவல்கள், திரைப்படங்கள், விளம்பரபடங்கள் என்று அத்தணை கலாச்சார பொருட்களின் அடிநாதம் இந்த அமெரிக்க-கனவே.  ஆனால், இந்த அமெரிக்க கனவின் அடிநாதம் “Nuclear Family” -  ஒரு தந்தை, ஒரு தாய், இரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.



ஆனால் இன்று 60% மேல் அமெரிக்காவில் குடும்பங்கள் “Single Parent Family” என்கிற ஒரு பெற்றோர் மட்டுமே இருக்கும் குடும்பங்கள். பொருளாதர ரீதியாக மட்டும் அல்ல, சமூகரீதியாகவும் அமெரிக்க கனவு வெறும் கனவே என்பது தான் இன்றைய அமெரிக்க யதார்த்தம். அமெரிக்க கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக துரத்தும் நம்து இன்றைய தலைமுறையினர் அமெரிக்க-யதார்த்தத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றனர். இந்தியாவில் 2020ல் “Single Parent” குடும்பங்கள் கண்டிப்பாக கணிசமான அளவில் இருக்கும் என்று சமூகவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


சரி, இத்தனை நாட்கள் நமது இந்திய சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி தான் இந்தியர் பண்பாடு என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்தது எது தெரியுமா? நம் கதைகளே. அதில் ராமாயணத்தின் பங்கு கணிசமானது ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தும் கதைகள் எத்தனையோ இருந்தாலும், அக்கருத்தின் SuperHero ராமன் தான்..


சமூகத்தில் ஒரு குடும்பத்தை கட்டிகாப்பதே பெரியஹீரோயிஸம் என்பதை தான் ராமாயணம் சொல்கிறது. ராமனின் சோதனைகள் காட்டுக்குச்செல்வது, மனைவி கடத்தப்ப்டுவது, கர்பிணியான மனைவி பிரிந்துசெல்வது, குழந்தைகள் த்ந்தையை அறியாமல் காட்டில் வளர்வது ஆகியன எல்லாம் அவன் குடும்பக்கஷ்டங்களே அன்றி சமூக பிரச்சனைகள் அல்ல. ராமாயணத்தின் முக்கியமான கரு குடும்பங்கள் பிரிவதும் பின் பல தடைகளை தாண்டி சேர்வதுமே. சென்ற தலைமுறையில் இந்த கருவை தாங்கித்தான் பல எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்கள் வந்தன. இந்த வரிசையில் வந்த இன்றைய மகாநதி, ஈசன் போன்ற படங்களின் முடிவுகளையும் எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்களின் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால், இன்று ராமயண தீம்களிலிருந்து நாம் எத்தனை தூரம் விலகிக்கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.



க, இன்று நாம் வேறு கதைகளை பேசிக்கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது மனிததத்துவம். போன தலைமுறையில் ராமாயணம் டீவியில் வந்தபோது ஞாயிற்றுகிழமைகளில் வாழ்க்கையே ஸ்தம்பித்தது. இந்த தலைமுறை ராமயணம் ரீமேக்கை பார்ப்பார் யாருமிலலை. ஒருவனுக்கு ஒருத்தி ஐடியலிஸத்தின் தீவிரவாதியான விக்கிரமனின் பூவே உனக்காக போன்ற படங்கள் இன்றைய சூழலில் தோற்பதும், இன்றைய கலாச்சாரத்தின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்கும் கரு.பழனியப்பனின் மந்திரபுன்னகை படத்தின் நிதர்சனமும் நம் கலாச்சாரமும் நம் பொருளாதாரத்தை போல மேற்கு நோக்கியே போய்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.



கதைகள் மாறினால் சமூகமும் மாறும் என்பதற்கு இந்த பதிவு போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...