Showing posts with label reality. Show all posts
Showing posts with label reality. Show all posts

Friday, February 4, 2011

காரைக்குடியில் நேற்று நாடோடிகள் ரிலீஸ்


இன்று தினகரனில் முக்கிய செய்தி: 7 நண்பர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் நண்பனை காதலித்த, ஆனால் வேறு ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திசென்றுள்ளனர். இந்த முயற்சியில் 3 பேர்களை அரிவாளால் வெட்டியும் உள்ளனர். பெண்ணும் காதலனும் எங்கோ ஓடிவிட்டனர். நாடோடிகள் கதையை அழகாக அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் வெகுவிரைவில் டீவி சீரியல் ஒன்றில் ரீப்ளே ஆகும் என்று உறுதியாக நம்பலாம். கதைகளும் நிஜவாழ்க்கையும் எதிரும்புதிருமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகளைப்போல ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன என்பதே நிஜம்.


இன்றைய மிடில்கிளாஸ் இளைஞர்கள் பெரும்பாலும் பொல்லாதவன் தனுஷின் பாதிப்பில் மிதக்கிறார்கள். பல்சர் பைக், 6 மாதத்திற்கு ஒருமுறை மாறும் செல்போன், ஜீன்ஸ்-டீசர்ட் சகிதமாக ஊரை வலம் வருகிறார்கள். 



இவர்கள் காதலிக்கும் பெண்களுக்கு பெரும்பாலும் தங்கம் ரம்யாகிருஷ்ணன் தான் ரோல்மாடல். ஒரு நிமிடம் காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அடுத்த நிமிடம் குடும்பகெளரவத்திற்காக காதலையும் தியாகம் செய்வார்கள். குத்து ரம்யாவிற்கும் தங்கம் ரம்யாவிற்கும் நடக்கும் போராட்டத்தில் பல தலைகள் நித்தம் உருளுகின்றன தமிழ்நாட்டில்.



Related Posts Plugin for WordPress, Blogger...