Tuesday, February 22, 2011

தமிழ் மசாலா படங்களின் ரெசிபி – 2



ஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள்.

ஆனால் அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து

உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்ன?

சிம்பிள். ஒவ்வொரு கேரக்டரும் ஒரு ஜான்ரே. ஹீரோ க்‌ஷன் ஜான்ரே. ஹிரோயின் ரொமான்ஸ் ஜான்ரே. வில்லன் ஹாரர் ஜான்ரே. காமெடியன்/ஆண்டி ஹீரோ காமெடி ஜான்ரே.  சுத்த மசாலா படங்களில் விசுவல் மேக்கிங், மியூசிக், எடிட்டிங் ஸ்டைல் எல்லாமே வேறு வேறு கேரக்டர் வரும்போதும் மாறிகொண்டேயிருக்கும்.

பல படங்களில் அக்‌ஷன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம், ரொமான்ஸ் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில/ஹிந்தி ரொமான்ஸ் படம், வில்லன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஹாரர் படம் என்று கரம்மசாலா மிக்ஸாக இருக்கும். இப்படி ரீமிக்ஸ் செய்வதால் கதை உரிமையை கூட சட்ட முறைப்படை வாங்கவேண்டியதில்லை.

இத்தனை நாட்கள் இந்த               பார்முலா நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? இதில என்ன பிரட்சனை என்று கேளுங்களேன் ப்ளீஸ..

மது டீவி சேனல்களுக்கு வேண்டுமானால் இது நல்ல சிஸ்டம். ஒரு படத்தை பாடல்கள், காமெடி ட்ராக் என்று அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிட்டுபிட்டாக ஓசியிலேயே மியூசிக் சானல், காமெடி சானல் என்று திருப்பி திருப்பி காட்டி காசு பண்ணிக்கொள்ளலாம். ஆனால் காசு கொடுத்து தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் அவர்கள் கொடுத்த காசுக்கான கதை-திரைக்கதை ஐட்டங்கள் கிடைக்கிறதா? இல்லவே இல்லை.

ஏனென்றால் இதுபோன்ற மசாலா படங்களில் சீரியஸாக கதை சொல்ல வாய்ப்பே இல்லை. ஒரு மிகப் பெரிய சீரியஸான சமூகப் பிரட்சனையை கூட இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டங்கள்/போராட்டங்கள் போல அபத்தமாக மாற்றிவிடுகிறார்கள். சினிமா என்பது வெறும் பாடல்கள், ரொமான்ஸ் காட்சிகள், பைட் சீன்கள், காமெடி பிட்டுகள் கலந்த மிக்ஸர் தானா?



சமீப காலத்தில் மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து இந்த பார்முலாவில்லிருந்து விலகி எடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் செய்,
பயணம் மற்றும் நடுநசி நாயகள். இந்த படங்களின் முயற்சியை முதலில் ஊடகங்கள் குறிப்பாக வலைப்ப்திவர்கள் பாராட்டி வரவேற்கவேண்டும். இந்த படங்களின் வெற்றி-தோல்வி இந்த படங்களில் கதை ஒன்றே ஒரு படத்தின் பிரதானம் என்ற நேர்மை இருக்கிறது. இந்த படங்களின் ஒரு படம் ஒரு ஜான்ரேஎன்ற பார்மெட் தமிழ்திரையுலகில் தீயாக பரவவினால்,  அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் உலக திரைப்பட விழாக்களில் தமிழ் படங்கள் போட்டிபோட்டு ஜெயிப்பது நிச்சயம்.

Monday, February 21, 2011

இனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்




(பின்) நவீன காலத்தில் தமிழர்கள்

டெக்னாலஜியை வாழ்வாதாரமாக கொண்டு ஒவ்வொரு வருடமும் கல்லூரியை விட்டு வெளிவரும் இரண்டு இலட்சம் இன்ஜினியர்கள் ஒரு பக்கம். முறையான தொழில்கல்வி இல்லாமல் தொழில்நகரங்களுக்கு குடிபெயர்ந்துகொண்டிருக்கும் பல இலட்சம் மக்கள் ஒரு பக்கம் என்று நமது தமிழ்சமுதாயமும் உலகமயமாகிக் கொண்டு தானிருக்கிறது இந்த உலகமயமாதலின் விளைவாக இன்ஜினியர்கள் மட்டுமல்ல. கோடிக்கணக்கில் சாதாரண மக்களும் தங்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈசன் படத்தில் வருவதைப்போல மனிதர்கள் - இந்துமதமே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்த ஆதிமதத்தின் காலத்திலிருந்து, ஒரே தாவலில் நைட்கிளப்-டேட்டிங்-லிவிங்டுகெதர்-(பின்)நவீனத்துவம் காலத்திற்கு தாவுகிறார்கள். இதில் ஈசனின் குடும்பத்தைப்போல் எத்தனை குடும்பங்கள் சிதறிசின்னாப்பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது? இனம்புரியாத எதிர்களால் ஏன் தோற்றோம், எப்படி தோற்கிறோம் என்பதையேனும் எத்தனை குடும்பங்கள் புரிந்துகொள்கின்றன?




விவசாயம் சார்ந்த சமூகத்திலிருந்து தமிழ் சமுதாயம் எந்திர தொழில்சார்ந்த நவீன சமூகத்திற்கும், எந்திரதொழிலிற்கு அடுத்த கட்டமான இன்றைய அமெரிக்கா-ஐரோப்பா-ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பின்-நவீன சமூகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கிறோம். நமது சமூகம் ஆதர்சமென்று நினைத்து கண்மூடித்தனமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இலக்கான பின்-நவீனத்துவ சமூகத்தின் இன்றைய நிலையென்ன? அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் தனிமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (Ref: Bowling Alone ). கூட்டுக்குடும்பம் தேய்ந்து நியூக்கிளியர் குடும்பம் ஆகி, பிறகு நியூக்கிளியர் குடும்பம் தேய்ந்து ஒரு-பெற்றோர் குடும்பம் (Divorced-Single Parent Family) மெஜாரிட்டியாகி ஆகிவிட்டது.

இன்று தமிழகத்திலும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டது. சிதையும் குடும்பங்களுக்கு காரணமான வில்லன்கள் : ஊடக-சமூக-பொருளாதார சக்திகளின் தாக்கங்கள்/பாதிப்புக்கள். ஊடக-சமூக-பொருளாதார சக்திகள் நம் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கும் புரியவைக்கும் கருவி எது?



குடும்பம் என்பது கணவன்-மனைவி மட்டும் அல்ல. தமிழகத்தில் பல தலைமுறை மனிதர்கள் (தாத்தா,அப்பா-அம்மா,குழந்தைகள்) இன்னும் ஒரே குடும்பமாக நகரத்தில் சின்னச்சின்ன பிளாட்களில் வாழ்க்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒவ்வொரு பிரட்சனை. அம்மாவாசை தோறும் குலதெய்வ கோயில்களுக்கு செல்பவர் ஒரு புறம். ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முழுதையும் கழித்தவர்கள் ஒரு புறம். வருடாவருடம் வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ளும் நிலையற்ற இளைய தலைமுறையினர் ஒரு புறம். காதல், கல்யாணம் போன்ற முக்கியமான விஷயங்கள் இவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை (கெளரவகொலைகள்-ஒருவனுக்குஒருத்தி-லிவிங்டூகெதர்) வெளிச்சம் போட்டுகாட்டிவிடுகிறது. இந்த தலைமுறைகள் ஒருவரை எப்படி புரிந்துகொண்டு இணக்கமாக வாழமுடியும்?



தமிழகத்தில் வந்த முதல் சமூகபுரட்சி:
                                                          
விவசாய சார்ந்த சமூகத்திலிருந்து நவீனத்துவ சமுதாயமாக மிகப்பெரிய கலகமில்லாமல் எநத சமூகமும் மாறவில்லை என்பது வரலாற்றின் உண்மை. இந்த சமூக தாவலுக்கு தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டாமா? இந்த தயார்படுத்தலை முதலில் செய்தது  திராவிடர் இயக்கங்கள்.

தொழில்புரட்சி ஏற்பட்டதற்குபின், திராவிடர் இயக்கங்கள், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது. அன்றைய சமுதாயத்தில் தமிழர்களின் அவலத்திற்கு காரணம் மதமும், மதம்-சார்ந்த தத்துவங்களுமே என்பதை உணர்ந்து மதம்-சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சமூகநீதி குரல் கொடுத்தனர். திராவிட இயக்கங்களின் ஒரு கிளை சமூகநீதி கோரிக்கையை அரசியல் மூலம் வெற்றிகரமாக கொண்டுவந்தபின் இந்த இயக்கங்களின் ஆதாரநோக்கம் நிறைவேறிவிட்டது. பிறகு இந்த இயக்கங்களின் மற்ற கொள்கைகள் பிசுபிசுத்து வலுவிலந்துவிட்டது.

இன்றைய நிலை

நேருவின் தயவாலும் திராவிட இயக்கங்களின் தயவாலும் இன்று நிறைய மக்கள் மிடில்கிளாஸ் ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம். இன்று தமிழ்நாட்டில் கிராமத்தில் இருப்பவர்களைவிட நகரத்தில் இருப்பவர்களே அதிகம். கிட்டத்தட்ட எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறோம். இண்ட்டர்நெட் 30-40 சதவிகித வீடுகளில் உள்ளது. ஆனால் இவையெல்லாம ஹார்ட்வேர் (Hardware).மேலைநாடுகளின்  டெக்னாலஜியை நுகர்பொருட்களாக இறக்குமதி செய்துகொண்ட நாம் டெக்னாலஜியில் புலிகளாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதில் வரும் சாப்ட்வேர் கலாச்சார பொருட்கள் - நம் மக்கள் தயாரிப்பது. இதன் தரம்?

நாம் டெக்னாலஜியில் புலிகள் என்பது எத்தனை பெரிய பொய்-மாயை என்பதை நமது எம்.என்.சி. சாப்ட்வேர் இன்ஜினியர்களை கேட்டாலே விளக்கமாக சொல்வார்கள் கடந்த ப்த்து-இருபது ஆண்டுகளில் நமது கல்வித்துறையில் வந்துள்ள இன்னொரு மிகப்பெரிய மாற்றம் கலை-சமூகம் சார்ந்த படிப்புக்கள், அடிப்படை சயின்ஸ் சார்ந்த படிப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டோம். இதனால் இன்றைய டெக்னாலஜி சார்ந்த உலக கட்டமைப்பில் நமது சமூகம் அந்நியபபட்டு மிகவும் அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா?

போன தலைமுறையின் சமூகநீதி அரசியலால் இன்று சாதிசேற்றில் சிக்கிவிட்டனர். நேருவின் சோஸியலிஸ்ட் பொருளாதாரம் சார்ந்த சமூகத்திற்கு இடஒதுக்கிடு அரசியல் ஓகே. ஆனால் இன்றைய கேபிடலிஸ்ட் சமூகத்திற்கு சாதி அரசியல் காலாவதியாகிவிட்டது அல்லவா? ஆனால் இன்று இருக்கும் திராவிட இயக்கங்கள் சாதி ஓட்டுவங்கியை கையில் வைத்துக்கொண்டு சமூகத்தை சீரலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த சமூகப்புரட்சி:

உலகமயத்தின் தாக்கத்தால் தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மிகப்பெரிய சமூகமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்தில், திராவிடர் இயக்கங்கள் பாதியில் விட்டுச் சென்றுவிட்ட சமூகப்புரட்சி மீண்டும் வரவேண்டும். அதற்கு முதலில் நமது சமூகம் அடையவேண்டிய அடுத்த கட்ட நிலை என்ன என்பதை வரையறுக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள் வெறுத்து ஒதுக்கிய பிராமின சமூகமே  நமக்கு நமது அடுத்தகட்ட முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என்பது Irony ஆனாலும் அதுவே நிஜம். பொருளாதாரத்தில் ஓரளவாவது முன்னேறிவிட்ட நாம், இதற்கு அடுத்த கட்டமான இலக்கியம், விளையாட்டு, சமூகம், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தில் முன்னேறவில்லை. ஒரு சமூகமாக தமிழருக்கு அடுத்த கட்டம் என்ன? நோபல், ஒலிம்பிக், ஆஸ்கார்/கான்ஸ் (Cannes) விருதுகள், E&Y தொழில்முனைவோர் விருதுகள் என்றிருக்க வேண்டாமா?





மக்கள் தொகையிலும் நிலபரப்பிலும் தமிழகத்திற்கு நிகரான பிரான்ஸ்-ஜெர்மனியின் சாதனைகளோடு நம்மை ஒப்பிட முடியுமா? நம்மிடம் மாறுதலுக்கான முயற்சிகள் கூட இருப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் இந்த மாறுதலை கொண்டுவர முனையப்போவதில்லை. ஏனென்றால் இந்த மாறுதல் அவர்களின் இப்போதைய சாதி-வாரிசு அரசிய்லையே மாற்றி முழுமையான மக்களாட்சி மலர வழி வகுக்கும்.

மீடியா புரட்சி:






மேலைநாடுகளில் தொழிற்புரட்சியின் (Industrial Revolution) போது டெக்னாலஜி மட்டும் மாறவில்லை. சைக்காலஜி, சமூகவியல், அழகியல் என்று மனித சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களை சென்றடையவற்கு நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும், அவை சார்ந்த மீடியாக்களுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. நாவல்களின் கதாபாத்திரங்களும்  திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் சிக்கலான சைக்காலஜி தத்துவங்கள் (ப்ராயிட், ஜங், ழகான்) அன்றாட வாழ்வில் எப்படி தாக்கம் ஏற்படுகிறது என்பதை சாமானியர்களுக்கும் புரியவைத்தன. இந்த நிதர்சனங்கள் கடவுளற்ற விஞ்ஞானம் சார்ந்த சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தது.

ஜப்பானில் இந்த சமூகமாற்றம் நிகழ்ந்தபோது இந்த மாற்றங்களை மையமாக வைத்து ஓசு (OZU) போன்ற இயக்குனர்கள் எடுத்த படங்களே




புராண-ஆன்மீக கருத்துகளைவிட இன்று மேலைய சைக்காலஜிட்களின் கருத்துக்களே இன்றைய் சமூகசூழலுக்கு (தமிழகத்திலும்) ஏற்றவாறு உள்ளன. சாமனிய மனிதருக்கும் புரியும் படி இந்த கருத்துக்களை மையமாக வைத்து தமிழில் இன்று எஸ்.ராவின் துயில் நாவல் போன்ற இலக்கியப்படைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற நாவல்கள் படிப்பவர்கள் வாழ்க்கையை புதியகோணங்களில் பார்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளில் புதிய தீர்வுகளை ஆலோசிக்கத் துவங்குவார்கள்.



ஆனால் இலக்கியம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத ந்மது சமூகத்தில் அனைத்து தர மக்களையும் சென்றடைய சினிமாவும் டீவியுமே சரியான மீடியாக்கள். ஆனால் இன்றைய சினிமாவும் டீவியும் வெறும் கனவுலக பேண்ட்சிகளிலேயே திளைத்திருக்கிறது.





ஸ்டார்-வார்ஸ், ஈ.டீ., பேக் டூ த ப்யூச்சர் போன்ற படங்களை பார்த்த போன தலைமுறை இளைஞர்கள் பலர் விஞ்ஞானி ஆவது ஒரு கவர்ச்சிகரமான கரீயராக (career) நினைத்து, அதற்காக உழைத்து, விஞ்ஞானி ஆனார்கள். இன்று தமிழகத்தில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் சமுதாயம் வைக்கும் ரோல்மாடல்கள் யார்? தமிழில் ரோல்மாடல்கள் இல்லாததால் அந்நியர்களையே ரோல்மாடல்களாக கொண்டால், குழந்தைகள் அவர்களது ரோல்மாடல்கள் இருக்கும் நாடுகளுக்குத்தானே புலம்பெயர்ந்து செல்வார்கள்? ஈழத்தைவிட்டு தமிழர்கள் புலம்பெயர்ந்ததை பற்றி புலம்பும் நாம், வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தைவிட்டும் தமிழர்கள் புலம்பெயர்ந்து போய்விடுவார்கள் (போய்கொண்டிருக்கிறார்கள்) என்பதை ஏன் மறந்திருக்கிறாரார்கள்?

ரசனை மாற்றம் ஒரு சின்ன ஆரம்பம்




சைன்ஸ் பிக்‌ஷன் படமாக வந்த நமது எந்திரன் படம் ஸ்டார்வார்ஸ் படத்தை போல யாரையேனும் இன்ஸ்பயெர் (Inspire) பண்ணுமா? கதைக்கு தேவையே இல்லாத பாடல் காட்சிகள் பார்ப்பவர்களை மட்டும் அல்ல இயக்குனரின் கவனத்தை கூட திசைதிருப்பி விட்டதே.. காமெடி எனற பெயரில் ஹீரோவுடன் இருக்கும் அசிஸ்டெண்ட் சயிண்டிஸ்ட்கள் (அவர்களும் சயிண்டிஸ்டுகள் தானே? இல்லை ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் கெளவரமான சயிண்டிஸ்டாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதா என்ன?)
கேலிக்குரியவர்களாக சித்தரிப்பது மாதிரி ஆங்கில படங்களில் வருகிறதா?

இந்த தவறுகளுக்கு சங்கர் காரணம் அல்ல. த்மிழ் ரசிகர்களே காரணம். காமெடி ட்ரேக், பாடல்-டான்ஸ் ட்ரேக் என்று கதைக்கு வேண்டாதவற்றை எதிர்பார்ப்பதால் வரும் விபரீதம். ஹிந்தியில் இன்று கதைசார்ந்த யதார்த்த சினிமாக்கள் வழக்கமான மசாலாக்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. ஆனால் தமிழில்? இந்த காமெடி-பாடல் பிட் இல்லாவிட்டால் ஒரு படம் கமெர்சியல் படம் அல்ல என்று நினைக்கும் ரசிகர் மனோபாவம் மாறினாலே நல்ல கதையுள்ள படங்கள் வருவதற்கு வழி வகுக்கும்.

சோசியல் மீடியாவின் சக்தி



மீடியாவின் சக்தியை நன்கு உணர்ந்தவர்கள் திமுகாவினர். திமுகவினர் (அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்) சினிமா சார்ந்தவர்கள். அரசியலில் வென்றால் தான் மீடியாவில் ஜெயிக்கமுடியும் என்பதை உணர்ந்து, சினிமா-அரசியல் காம்பினேஷனை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். அரசியலில் வென்ற பின்னர், மீடியாவை கையில் வைத்து கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள்   அரசிய்ல் சாராத பேண்ட்டசி சினிமாவையே மக்கள் பர்ர்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் அடுத்த நிலை கனவுகள்/கதைகள் என்பது இப்போது அவர்களுக்கு அலர்ஜியே. இவர்களை மீறி எப்படி மீடியா புரட்சி? வரும். முதலில் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளுங்கள். மீடியா புரட்சி தானாக நடந்துவிடும்.



டுனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் கூட இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் அரசியல் புரட்சியே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் திரைப்பட ரசனையை கூட மாற்ற முடியாதா என்ன?


Thursday, February 17, 2011

ஆடுகளம் தள்ளுபடி விலையில்




ஆகா.. சிட்டில இப்படி தள்ளுபடி கொடுத்தா எப்பூடி இருக்கும்..;

பழனியில் பார்த்த இன்னொரு விளம்பரம்
 

Wednesday, February 16, 2011

கெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி





கெளதமின் பார்முலா

போலீஸ் ஆக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் A சென்டர்களிலும், பெண்களிடமும் பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் B & C சென்டர்களில் போலீஸ் ஆக்‌ஷனுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி இருக்கும். இந்த இரண்டு முரண்பாடான ஆடியன்ஸையும் ஒரே படத்தில் திருப்திபடுத்துவது ஒரு பெரும் சாதனை. இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுள் கெளதம் மேனனும் ஒருவர்.
இதற்கு முக்கிய காரணம் ஆக்‌ஷனுடன் அழகான காதல் கதையையும் இணைத்து கதையை சொன்னவிதமே. காக்க காக்க படத்தின் காதல் ட்ரேக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் காதல் ட்ரேக்கும் தனியாக படம் செய்தாலும் ஜெயிக்கும் அளவு தரமாக இருந்தது. ஆக்‌ஷன் கதை சொல்பவர்களால் காதல் கதை சொல்லவது கடினம். காதல் கதை சொல்பவர்களுக்கு ஆக்‌ஷன் கதை சொல்வது கடினம். இரண்டும் சேர்ந்தால் எல்லா சென்ட்டர்களிலும் வெற்றி நிச்சயம். இந்த வெற்றியை பலமுறை பெற்றுள்ளார் கெளதம்.
 




வாரணம் ஆயிரம் சரியாக வராதததிற்கு யார் காரணம் எனற பிரச்சனையில் கெளதம் சூரியாவிற்கும் டேர்மஸ் சரியில்லாமல் போய்விட்டது. வாரணம் ஆயிரம் சரியாக வராததிற்கு உண்மையில் யார் காரணம்?

கெளதமின் பதில் சூர்யா காக்க காக்க போன்ற படத்திலும் நடிக்கிறார். சிங்கம் போன்ற படத்திலும் நடிக்கிறார். இந்த முரண்பாடுகளால் எனது படம் பாதிப்புக்குளாகிறது. கேஸ்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது. இந்த கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது, இரண்டும் போலீஸ் கதைகளே. ஆனால் ஒன்று A-B-C என்று அனைத்து சென்ட்ர்களுக்கும் பொருந்தும் படம். மற்றது B-C சென்டர்களுக்கென்றே எடுக்கப்பட்ட (அதி)ஹிரோயிஸம் படம்.. சூர்யாவின் இந்த ஸ்டார் இமேஜ் படத்தின் திரைக்கதை, காஸ்ட்டியூம் என்று பல டிபார்மண்ட்களில் நுழைந்துவிடுகிறது. இந்த ஸ்டார் இமேஜ்ஜிற்காக செய்யப்பட்ட காம்ரோமைஸ் படத்தை பப்படம் ஆக்கிவிடுக்கிறது. ஆனால் படம் தோற்றால் முழு பழி டைரக்டரின் மேல்தான் விழுகிறது.

முதல் சவால்



வாரணம் ஆயிரம் படம் சரியாக வராததிற்கு காஸ்டிங் (Casting) மிஸ்ட்டேக் தான் காரணமே அன்றி தான் இல்லை என்று சவால விட்டு, அதை நிருபிக்கவென்றே எடுத்தது போலிருந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. பலத்த மலையாள வாடையுடனும் ஒரு காதல் கதையை தமிழில் வெற்றிபெற செய்யமுடியும் என்று தைரியமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நிருபித்த கெளதம் சூர்யாவுடனான சவாலில் ஜெயித்தார்.. சிம்புவிற்கு பொருந்திய கதை ஸ்டைல் வாரணம் ஆயிரத்தில் சூர்யாவிற்கு பொருந்தவில்லை. ஆக வாரணம் ஆயிரம் தோல்விக்கு காரணம் கெளதம் இல்லை என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

கேஸ்ட்டிங் என்பது மேலைநாடுகளில் மிக முக்கியமான டிபார்ட்மெண்ட். ஒரு படத்தின் வெற்றி தோல்வியைகூட பல சமயங்களில் கேஸ்ட்டிங் நிர்ணயிக்கிறது. மற்ற டைரக்டர்கள இதுவரை உணராதது தான் அவர்களது மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக போன தலைமுறை டைரக்டர்கள் பலர் தவறான கேஸ்ட்டிங்கினால் தங்களது மார்க்கெட்டை இழந்துள்ளார்கள் என்பதால் இந்த தலைமுறை டைரக்டர்கள் கெளதம் மேனனை முன்மாதிரியாக கொண்டு விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்

இரண்டாவது சவால் :


மின்னலே முதல் விண்ணைத் தாண்டி வருவாயா வரை அனைத்து படங்களும் இசையினால் தான் ஹிட்டானது என்பது இப்போது பலரின் (ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட) வாதம். இல்லை என்று நிருபிக்க சவால் விட்டு வேலை செய்வது போல் வருகிறது நடுநசி நாயகள். நடுநசி நாய்கள் படம் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.
  
இந்த முறையும் ஜெயிப்பாரா கெளதம் மேனன்?




பிகு : கெளதம் மேனனின் படங்களின் பெயர்கள் மிகவும் இலக்கிய நயத்துடன் இருப்பதால் கமுகாவினர்கள் அவருக்கு பெரும் ஆதரவை கொடுத்துவருகிறார்கள். சிவப்பு ரோஜாக்கள் போன்ற கதைகள் எப்படியும் ஆண்டுக்கு ஒன்றாவது வந்துவிடும். பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் சுந்தர ராமசாமியின் கவிதை தொகுப்பின் தலைப்பை நடுநசி நாய்கள் என்று வைத்திருப்பதால் படம் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.



Monday, February 14, 2011

தமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி




ஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள். இதற்கு க்ராஸ் ஜான்ரே (Cross-Genre) அல்லது கோரல் (Choral) படங்கள் என்று பெயர். இது ஸ்பெசல் டாப்பிங்கோடு கூடிய பீட்ஸாவைப்போல.



இரண்டு ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி க்ராஸ்-ஜான்ரே கதை எடுப்பது அங்கே பெரிய சாதனை. உதாரணமாக ஆயுத எழுத்து படத்தில வருவதுபோல பல கேரக்டர்கள் கோணத்தில் ஒரே சம்பவத்தை சொல்லும் திரைக்கதை யுக்தியை முதன்முதலில் உருவாக்கிய  (Alejandro González Iñárritu) இனாரித்து எடுத்துள்ள சமீபத்திய படம் பியூட்டிபுல் (Biutiful). பூயூட்டிபுல் படம் கேங்ஸ்டர்-கோஸ்ட் ஜான்ரி கலவை. இதையும் ஒரு திரைக்கதை சாகசம் என்று பலர் போற்றியுள்ளனர். இரண்டு ஜான்ரேக்கள் கலந்த திரைக்கதைக்கே இந்த கலாட்டா என்றால் நாலைந்து ஜான்ரேக்கள் கலந்து வரும் நம் தமிழ் மசாலா படங்களை நாம் கொண்டாட வேண்டாமா?



நமது சராசரி படங்களுக்கு ஜான்ரே என்கிற பாகுபாடே கிடையாது. ஒரே படத்தில் ஒரு சீன் காமெடியாகவும், அடுத்த சீன் ஆக்‌ஷனாகவும், அடுத்த சீன் ரொமான்ஸாகவும் மாறிமாறி தொடர்ந்துகொண்டிருக்கும். ஏன் இப்படி? நம்து டைரக்டர்களை கேட்டால் வரும் பதில் “பாஸ், அங்கெல்லாம் சாப்பாடு பர்கர், பீட்ஸா மாதிரி ஒன்னு-இரண்டு சவைதான். நம்க்கு அப்படியா? நாலஞ்சு வ்கையான கூட்டு, பொரியல், பருப்பு, சாம்பார், ரசம், மோர்-த்யிர், பாயாசம் என்று மல்டி-கோர்ஸ் மீல்ஸ் போல. அதனால தான் காமெடி,ஆக்‌ஷன்,ரொமான்ஸ் எல்லாம் ஒரே படத்தில வருது”.


அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 

Thursday, February 10, 2011

ராதாமோகனின் பயணம - இதுவரை


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் ராதாமோகன். ஆனால் அதிக ஆர்பாட்டம் இல்லாதது இவரது பலவீனம். என்னை பொருத்தவரையில் அதுவே அவர் பலமும் கூட.

அழகிய தீயே படம் இவரது முதல் படம் இன்னொரு மெளனராகம். இதன் கதைசொல்லும் திரைக்கதை பாணி அலாதியானது. ஒரு ஹோட்டலில் இருவரின் உரையாலில் ஆரம்பிக்கும் கதை, பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துசேர, புதிதாக வரும் ஒவ்வொரு நபரும, கதையை அதுவரை நடந்த உரையாடலில் இருந்து தொடர்வார். இதை ஒரு சர்வர் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பார். அந்த சர்வர் உடன் பார்வையாளரும் ஒன்றி கதை வளர்வதை கவனிப்பது போன்று அமைந்திருக்கும் திரைக்கதை. அழகிய தீயே படத்தில் விழிகளின் அருகினில் வானம் ஒரு மிகப்பெரிய ஹிட் பாடல்.
அழகிய தீயே - ராதாமோகனுக்கு ஒரு அழகிய ஆரம்பம் ஆனது.

மொழி ஒலியோடு வாழ்க்கை நடத்தும் இசைக்கலைஞன் ஹீரோ. ஒலியே அறியாத மாற்றுத்திறனாளி ஹீரோயின். இலக்கணம் பிரலாத காதல் கதை. நான் அறிந்த பல தமிழ் குடும்பங்கள் குழந்தைகளோடு இரண்டு-மூன்று முறை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில், இந்த சிறப்பு எத்தனை பெரிய சாதனை என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். மொழியின் பலம் அதன் பாடல்கள்.

ராதாமோகனின் சாதனை படம் என்பது என்னை பொருத்தவரை அபியும் நானும். கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மசாலா தமிழ் படங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு இருக்கின்றன. ஆனால் கதையோ பிளாட்டோ (Plot) இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படவரிசையில் அபியும் நானும் தான் முதல்.அபியும் நானும்ஒரு தகப்பனின் கேரக்டர் ஸ்டடி (Character Study) மட்டுமே. திரைக்கதை முதலில் “Meet the Parents” (மாமனாருக்கும் வருங்கால மருமகனுக்கும் நடக்கும் மோதல்) கொஞ்ச நேரம், அறியாத வயதில் செய்த தவறை உணர்ந்து வருந்தும் கேரக்டர் (கேளடி கண்மணி ஹீரோயின் போல்) கதை கொஞ்ச நேரம், (Father of the Bridge) மகளின் கல்யாணம் நடக்கையில் அப்பாவிற்கு நிகழும் நெருக்கடி (Coming of Old-Age Crisis) கொஞ்ச நேரம் என்று அங்கும்-இங்கும் அலைகிறது (திரைக்கதை). நேர்த்தியில்லாத ஒரு இயக்குனரிடம் மாட்டியிருந்தால கதை கிச்சடி அகியிருக்கும். ஆனால் ராதாமோகனின் கையில் இது ஆன்டன் செக்காவ் (Anton Chekov) ஸ்டைல் கேரக்டர் ஸ்டடி நாடகமாக மலர்ந்திருக்கிறது.

செக்காவ் புரட்சி செய்வதாக நினைத்து பிளாட்டே (Plot) இல்லாமல் நாடகம் போட்டப்போது தேர்ந்த ரசிகர்கள் நிறைந்த ரஷ்யாவிலேயே நாடகம் புரியாததால் அரங்கத்தில் கலாட்டா நடந்ததாக கேள்வி. அத்தகைய ஒரு கதைஅமைப்பை தமிழில் செய்ய இமாலய ரிஸ்க் எடுத்த ராதாமோகனின் தைரியத்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் வைக்க வேண்டும்.

அபியும் நானும் படத்திலும் பாடல்கள் ஒரளவு ஹிட்டே. இதுவரை இசையை ஒரு மிகப் முக்கியமான அங்கமாக கொண்டு படம் எடுத்த ராதாமோகனின் அடுத்த படத்தில் பாடல்களே இல்லை. ராதாமோகனுக்கு உண்மையிலேயே ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலும்!! அரைத்த மாவையே அரைத்துவிட்டு, சொல்லிய கதையையே திரும்ப்-திரும்ப சொலுவதோடு நில்லாமல், “அவனை நிறுத்தச்சொல். நான் நிறுத்தறேன்என்று நாயகன் கணக்கில் டைலாக் அடிக்கும் அதி-ஹீரோயிஸம் துதிக்கும் பெரும்பான்மை டைரக்டர்களிடமிருந்து விலகி தனித்து தெரிகிறார் ராதாமோகன்.

-         இங்ஙனம்,
   ராதாமோகனின் “பயணம்வெற்றிபெற வாழ்த்தும்,
   கொள்கை பரப்பு செயலாளர் , கதை முன்னேற்ற கழகம்

Tuesday, February 8, 2011

நீதிபதிகள் காலத்தின் மகா கதைசொல்லிகள் : தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸ்


ஹிந்துவில் பிப்ரவரி 5, 2011 வந்த ஒரு தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸிடன் ஒரு உரையாடலில் இருந்து:



The Indian Supreme Court has been taking expansive steps to monitor and curb corruption in what is being referred to as a “season of scams.” With its exemplary powers, just like the Constitutional Court of South Africa, how do you see the court's role as a moral compass for our times?
I would say that the Supreme Court of India, as in any other country, should do much more than just resolving disputes between people. Courts play an enormously significant role in representing the aspirations of a nation, telling us what it means to be an Indian in India and a South African in South Africa. It should not be through grand three-piece statements, but through an incremental way of defining how power should be exercised, what rights of citizens are and what the relationship between the government and its people should be. Judges should be great storytellers of their age, and the way you tell it through a judgment is just as important as what you decide.

அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், ஊடகங்கள் ஆகிய மூன்று தூண்களும் சீர்குலைந்து விட்ட இந்த காலகட்டத்தில் நீதித்துறை ஒன்றுதான் இன்று நமது சமூகத்தின் ஒரே நம்பிக்கை. பாக்கிஸ்தானில் கூட நீதித்திறையினர்தான் முசாரப்பை துரத்தியட்டித்தார்கள். ந்ம் நம்பிக்கையை காப்பாற்றுமா நீதித்துறை?
Related Posts Plugin for WordPress, Blogger...